தோனி அடித்த 2 சிகஸ்ர்கள்... 'எங்களால் நம்ப முடியவில்லை' - வாயை பிளந்த மார்க் வுட்!

MS Dhoni Sixes In Chennai: லக்னோ அணிக்கு எதிரான போட்டியின் கடைசி ஓவரில் தோனி அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில், அந்த அணியின் பந்துவீச்சாளர் மார்க் வுட் தனது கள அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 6, 2023, 06:28 PM IST
  • சென்னை அணி அடுத்த போட்டியில் மும்பை உடன் மோதுகிறது.
  • சென்னை - மும்பை போட்டி வரும் ஏப். 8ஆம் தேதி நடக்கிறது.
தோனி அடித்த 2 சிகஸ்ர்கள்... 'எங்களால் நம்ப முடியவில்லை' - வாயை பிளந்த மார்க் வுட்! title=

MS Dhoni Sixes In Chennai: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஐபிஎல் வரலாற்றில் நான்கு கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளது. அதுமட்டுமின்றி, மொத்தம் இதுவரை நடந்த 15 சீசன்களில் இரண்டு சீசன்களில் தடையால் விளையாடாமல் இருந்தது. எனவே, அந்த 13 சீசன்களில் 11 முறை பிளே-ஆப் சுற்றுக்கு சிஎஸ்கே தகுதிபெற்றுள்ளது. 

சமீபத்தில், 2021ஆம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தை வென்ற சிஎஸ்கே, 2022ஆம் ஆண்டில் 9ஆவது இடத்தை பிடித்தது. மேலும், இந்த தொடரில் சிஎஸ்கே அணி மீதான எதிர்பார்ப்பும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. குறிப்பாக, இந்த தொடர் கேப்டன் தோனியின் கடைசி தொடராக பார்க்கப்படுகிறது. எனவே, இந்த சீசனில் சிஎஸ்கே விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும், ரசிகர்கள் ஆரவாரமாக இருக்கின்றனர். 

அந்த வகையில், தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி முதல் போட்டியில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும், பலம் வாய்ந்த லக்னோ அணியை சொந்த மண்ணான சென்னையில் வீழ்த்தி, எப்போதும் அது சாம்பியன் அணிதான் என நிரூபித்தது. 

மேலும் படிக்க | கொல்கத்தா vs பெங்களூர்: மீண்டும் கோலி அசத்துவாரா? செக் வைக்க காத்திருக்கும் கேகேஆர்

அந்த போட்டியில், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் களமிறங்கிய கேப்டன் தோனி, மார்க் வுட் பந்துவீச்சில் அடுத்தடுத்து 2 சிக்ஸர்களை பறக்கிவிட்டு மிரட்டினார். 2 சிக்ஸர்களை அடித்த அடுத்த பந்தே அவர் ஆட்டமிழந்தாலும், அந்த சிக்ஸர்களால் ரசிகர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர் எனலாம். 

இந்நிலையில், அந்த இரண்டு சிக்ஸர்கள் குறித்து பந்துவீச்சாளர் மார்க் வுட் கூறியதாவது,"நானும் கே.எல்.ராகுலும் பேசிக் கொண்டிருந்தோம். நாங்கள் நிதானமாக இருக்க முயற்சி செய்தோம், அவரை எப்படி ஆட்டமிழக்கச் செய்வது என்று யோசித்தோம். என் மனதில், நான் தற்காத்துச் செல்ல முயற்சிக்கவில்லை. உண்மையில் அவர் ரன்களை எடுக்க முயற்சிப்பதை தடுக்கும் வழிகளைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். 

துரதிருஷ்டவசமாக, எனக்கு 12 ரன்கள் போய்விட்டது. ஆனால், குறிப்பாக அந்த இரண்டாவது ஷாட் ஒரு அற்புதமான ஷாட். கேஎல் ராகுலும், நானும் முடிவு செய்த இடத்தில்தான் நான் சரியாகப் பந்து வீசினேன். ஒரு பவுன்சரை வைடாக வீசினால், அதை அடிக்க சிரமமப்பட வேண்டும் என நினைத்தோம். அவர் அதை எளிதாக அடித்தது மிகவும் நம்பமுடியாததாக இருந்தது.

அவர் பேட்டிங் செய்ய வெளியே வந்த போதும், அந்த இரண்டு பந்துகளை அடிக்கும் போதும் மைதானத்தில் வந்த சத்தம், நான் இதுவரை கேட்டதிலேயே அதிக சத்தமானது எனலாம். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும், அவை இரண்டும் நல்ல ஷாட்கள்" என்றார். 

மார்க் வுட் 2018ஆம் ஆண்டில் சென்னை அணிக்காக ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அவர் கேப்டன் தோனி தலைமையின்கீழ் விளையாடி உள்ளார். அந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில்தான் விளையாடினார். அதில், விக்கெட் எதையும் எடுக்காமல் 49 ரன்களை கொடுத்திருந்தார். 

மேலும் படிக்க | IPL 2023: கடைசி ஓவர் வரை பரபரப்பு... பஞ்சாப் வெற்றி - புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் சரிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News