IPL 2023: தோனி கோப்பையை வெல்ல மாட்டார்: ஸ்ரீ சாந்த் வந்ததும் சொன்ன அதிரடி கருத்து

இந்த ஐபிஎல் போட்டியில் தோனி கோப்பையை வெல்வதற்கு குறைவான வாய்ப்புகளே இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 22, 2023, 01:16 PM IST
IPL 2023: தோனி கோப்பையை வெல்ல மாட்டார்: ஸ்ரீ சாந்த் வந்ததும் சொன்ன அதிரடி கருத்து title=

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி தடை செய்யப்பட்ட ஸ்ரீசாந்த், நீதிமன்ற படிகள் ஏறி தன்மீதான குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெற்றிருக்கிறார். மீண்டும் ஊள்ளுர் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய அவர், இப்போது ஐபிஎல் போட்டிக்கும் திரும்பியிருக்கிறார். இந்த முறை வீரராக இல்லாமல் ஒரு வர்ணணையாளராக (காமன்டேட்டராக) களமிறங்க இருக்கிறார். ஸ்டார்ஸ்போர்ட்ஸ் வெளியிட்டிருக்கும் ஐபிஎல் தொடருக்கான நட்சத்திர வர்ணணையாளர்கள் பட்டியலில் ஸ்ரீசாந்த் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் ஸ்ரீசாந்த் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்புவது மிகவும் உற்சாகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Chaitra Navratri 2023: சைத்ர நவராத்திரியில் இப்படி வழிபட்டால் துர்கை அருள் பொழிவாள்..!

பிரபல ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றுக்கும் ஐபிஎல் ரிட்டன்ஸ் குறித்து ஸ்ரீசாந்த் பேட்டியளித்திருக்கிறார். அதில் இந்த முறை ஐபிஎல் கோப்பையை யார் வெல்லப்போகிறார்கள்? என்ற தன்னுடைய கணிப்பையும் தெரிவித்திருக்கிறார். அந்த கணிப்பில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்லாது என தெரிவித்திருக்கும் ஸ்ரீசாந்த், விராட் கோலி அங்கம் வகிக்கும் ஆர்சிபி அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாகவும், என்னுடைய தனிப்பட்ட விருப்பமும் கூட என தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு என்னுடைய ஆதரவு இருக்கும் என்றும் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசும்போது, ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமான அணி என்றால் அது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். சிஎஸ்கேவுக்கு பல முறை பட்டங்களை வென்று கொடுத்திருக்கிறார் தோனி. ஆனால் இம்முறை அவர் தலைமையில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என நான் நினைக்கவில்லை. விராட் கோலி அங்கம் வகிக்கும் ஆர்சிபிக்கு அதிகம் வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். பாப் டூபிளசிஸ் தலைமையில் அந்த அணி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு அணியாக பார்க்கும்போது அவர்கள் மற்ற அணிகளை விட எல்லா துறைகளிலும் சிறப்பாக இருப்பதாக கருதுகிறேன். முன்பு சிஎஸ்கே அப்படி இருந்தது.

இதனால் ஆர்சிபி அணிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக எண்ணுகிறேன். தனிப்பட்ட முறையில் என் மாநிலமான கேரளாவைச் சேர்ந்த சஞ்சு சாம்சன் கேப்டனாக இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஆதரவு இருக்கும். அதேநேரத்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் போட்டிக்கு திரும்புவதில் உற்சாகமாகவும் மிகழ்ச்சியாகவும் உணர்கிறேன். ரசிகர்களை அதே உத்வேகத்தில் பார்க்க ஆவலாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023க்கு பிறகு தோனியின் பிளான் இதுதான்! போட்டுடைத்த சிஎஸ்கே வீரர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News