டெல்லி அணியோடு ஐக்கியமான ரிஷப் பன்ட் - விராட் படையை வீழ்த்த கொடுத்த டிப்ஸ்

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் ஒரு வெற்றிகூட பெறாத நிலையில், ஆர்சிபி அணிக்கு எதிராக வெற்றி பெறுவதற்கான டிப்ஸ்களை நேரடியாக சென்று கொடுத்திருக்கிறார் ரிஷப் பன்ட்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 15, 2023, 02:00 PM IST
டெல்லி அணியோடு ஐக்கியமான ரிஷப் பன்ட் - விராட் படையை வீழ்த்த கொடுத்த டிப்ஸ் title=

ஐபிஎல் கிரிக்கெட் 2023 தொடர் விறுவிறுப்பு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரத்தில் நடைபெற்ற பல போட்டிகள் கடைசி பால் வரை சென்று ரசிகர்களை விறுவிறுப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றது. களத்தில் செய்யும் சிறு தவறுகள் போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக மாறிக் கொண்டிருக்கின்றன. ஒரு வைடு வீசாமல் இருந்தால் கூட வெற்றிபெற்றிருக்கலாம் என்று கடந்த சில போட்டியின் முடிவுகள் அமைத்திருக்கின்றன. அந்தளவுக்கு விறுவிறுப்புடன் சென்று கொண்டிருக்கும் ஐபிஎல் போட்டியில் இன்னும் வெற்றிக் கணக்கை தொடங்காமல் இருக்கும் ஒரே அணி என்றால் அது டெல்லி கேப்பிட்டல்ஸ். 

மேலும் படிக்க | RCB vs DC: இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? பெங்களூருக்கு சான்ஸ் அதிகம்

டேவிட் வார்னர் தலைமையில் களமிறங்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ், 4 போட்டிகளில் விளையாடி இன்னும் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. டேவிட் வார்னரை தவிர மற்ற யாரும் பேட்டிங்கில் சோபிக்காமல் இருப்பது அந்த அணிக்கு பெரும் தலைவலியாக இருக்கிறது. அக்சர் படேல் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் ஒரளவுக்கு சிறப்பாக விளையாடுகிறார். மற்ற யாரும் இன்னும் தங்களின் முழு ஆட்டத்தையும் வெளிப்படுத்தாமல் இருக்கின்றன. இதுவே டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. திருமணத்துக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மிட்செல் மார்ஷ் மீண்டும் டெல்லி அணியுடன் ஐக்கியமாகியுள்ளார். அவரின் வருகை அந்த அணிக்கு பெரும் நம்பிக்கையாக இருக்கிறது. 

இன்றைய போட்டியில் பாப் டூபிளசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியை டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் பவுலிங், பேட்டிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அந்த அணியால் ஆர்சிபியை வீழ்த்த முடியும். பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, காயமடைந்து விளையாடாமல் இருக்கும் ரிஷப் பன்ட் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்திருக்கிறார். அவர் ஆர்சிபி அணியை வீழ்த்துவதற்கான டிப்ஸ்களை தன்னுடைய சக அணி வீரர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் வலிமையான அணிகளில் ஒன்றாக ஆர்சிபி இருக்கிறது. அதனால் அந்த அணியுடன் எப்படி விளையாடினால் வெற்றி பெற முடியும்? என்ற ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார் ரிஷப் பன்ட். 

காயமடைந்து தற்போது குணமாகிக் கொண்டிருக்கும் அவர், இந்த சூழலிலும் அணிக்காக நேரடியாக களத்துக்கே வந்து ஆலோசனைகளை கொடுத்திருப்பது டெல்லி அணிக்கு புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. இதனால் இன்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி புது ஃபார்முலாவுடன் களத்தில் இறங்க இருக்கிறது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2023 புள்ளி பட்டியல்: சறுக்கிய ஆர்ஆசிபி... டாப் 4-ல் சென்னை இல்லை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News