IPL 2023 SRH vs PBKS: நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் தொடர் மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், இந்த 10 நாள்களில் சுமார் 14 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ளன.
இன்று மாலை அகமதாபாத் நகரில் நடைபெற்ற குஜராத் - கொல்கத்தா அணிகளுக்கு எதிரான போட்டியில், கொல்கத்தாவின் ரிங்கு சிங்கின் கடைசி நேர அதிரடியால், அந்த அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று புள்ளிப்பட்டியலிலும் முன்னேற்றம் கண்டது. இப்போட்டியை தொடர்ந்து, ஹைதராபாத் நகரில் நடந்த இரவு போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது.
டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஹைதராபாத் அணி கடந்த இரு போட்டிகளை விடவும் இதில் சிறப்பாக பந்துவீசியது. இதனால், பஞ்சாப் அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டாக சரிந்தன. தொடக்கதில் களமிறங்கிய கேப்டன் ஷிகர் தவாண் மட்டும் தாக்குபிடிக்க மற்ற பேட்டர்கள் அனைவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர். சற்று நேரம் தாக்குபிடித்த சாம் கரன் மட்டும் 22 ரன்களை எடுத்தார்.
இதன்மூலம், அந்த அணி 15 ஓவர்களில் 88 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான இருந்தது. அப்போதும், ஷிகர் தவாண் களத்தில் இருந்தார். அவர், இளம் வீரர் மோஹித் ரதீ உடன் கூட்டணி சேர்ந்து அடுத்த ஐந்து ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ரன்களை குவித்தார். வெறும் 2 பந்துகளை மட்டுமே ரதீ சந்தித்தார். மீதம் 28 பந்துகளை ஷிகர் தவாண் தான் எதிர்கொண்டார். இவர்கள் கடைசிவரை விக்கெட்டை பறிகொடுக்காமல் அணியின் ஸ்கோரை சற்று நல்ல நிலைமைக்கு எடுத்து வந்தனர்.
ஷிகர் தவாணின் நிலையான ஆட்டத்தால், பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை எடுத்தது. கடைசி 5 ஓவர்களில் 55 ரன்கள் குவித்த அசத்த, இறுதிவரை ஷிகர் தவாண் ஆட்டமிழக்காமல் 99 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் பந்துவீச்சில் மயாங்க் மார்க்கண்டே 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன், உம்ரான் மாலிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, களமிறங்கிய ஹைதராபாத் அணி, ஓப்பனர் ஹாரி ப்ரூக் 13 ரன்களையும், மயாங்க் அகர்வால் 21 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். 3ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பை அமைத்த ராகுல் திரிபாதி - கேப்டன் மார்க்ரம் நிதானமாக ஆடி ஆட்டத்தை முடித்து வைத்தனர். இதன்மூலம், 17.1 ஓவர்களில் இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகள் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. ராகுல் திரிபாதி 74 (68), எய்டன் மார்க்ரம் 37 (21) ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆட்ட நாயகனாக ஷிகர் தவாண் தேர்வானார்.
இத்தொடரில், இரு அணிகளும் தலா 3 போட்டிகளை விளையாடியுள்ளது. தொடரில், ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி இதுதான். மேலும், பஞ்சாப் அணிக்கு முதல் தோல்வியும் இதுதான். புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் 6ஆவது இடத்திலும், ஹைதராபாத் 8ஆவது இடத்திலும் உள்ளன.
மேலும் படிக்க | சாஹல் மனைவியுடன் சுற்றுகிறாரா இந்த இந்திய வீரர் - பார்ட்டி புகைப்படத்தால் சர்ச்சை !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ