RCB vs DC: இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? பெங்களூருக்கு சான்ஸ் அதிகம்

Royal Challengers Bangalore Vs Delhi Capitals: ஐபிஎல் 2023 தொடரின் 20வது போட்டியில் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

Written by - Shiva Murugesan | Last Updated : Apr 15, 2023, 11:25 AM IST
  • நடப்பு சீசனில் டெல்லி அணி இன்னும் ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை.
  • புள்ளி பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8வது இடத்தில் உள்ளது.
  • புள்ளி பட்டியலில் டெல்லி கேபிடல்ஸ் 10வது இடத்தில் உள்ளது.
RCB vs DC: இன்றைய ஐபிஎல் போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள்? பெங்களூருக்கு சான்ஸ் அதிகம் title=

M Chinnaswamy Stadium Pitch Report: இந்தியன் பிரீமியர் லீக் 2023 சீசனில் அடுத்தடுத்து இரண்டு தோல்விகளுக்குப் பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) மற்றும் டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணிகள் இன்று மாலை நடக்கவிருக்கும் போட்டியில் மோதுகின்றன. இன்று (ஏப்ரல் 15, சனிக்கிழமை) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. அதேபோல மற்றொரு ஆட்டம் லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன. அந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும்.

நடப்பு ஐபிஎல் சீசனில் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி அணி இன்னும் எந்த ஒரு போட்டியிலும் வெற்றி பெறவில்லை. முதல் நான்கு ஆட்டங்களில் தோல்வியை சந்தித்ததால், டெல்லி அணி தனது வெற்றி கணக்கைத் திறக்க போராடும். இதற்கிடையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 212 ரன்கள் எடுத்தும் தோல்வியை சந்தித்ததால், இன்றைய போட்டி பெங்களூருக்கு முக்கியமானது. 

பெங்களூர் மற்றும் டெல்லி போட்டி விவரம்:
இடம்: எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
தேதி & நேரம்: சனிக்கிழமை, ஏப்ரல் 15, பிற்பகல் 3:30PM
டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா

 

மேலும் படிக்க: குஜராத்-பஞ்சாப் போட்டியில் 8 பெரிய சாதனைகளை செய்த ஷுப்மான் கில்

சின்னசாமி ஸ்டேடியத்தின் விவரம்:
சின்னசாமி ஸ்டேடியத்தின் மேற்பரப்பு பேட்டிங் பிரிவுக்கு பெரிதும் சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் பொதுவாக எந்த இலக்கும் பாதுகாப்பாக இருக்காது. எனவே முதலில் பேட்டிங் செய்யும் அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியை காட்ட வேண்டும். இந்த விக்கெட்டில் முதலில் பந்துவீசுவது சிறப்பாக இருக்கும்.

சின்னசாமி ஸ்டேடியத்தின் சராசரி ரன் விகிதம்:
ஐபிஎல் 2023 இல் இந்த மைதானத்தில் விளையாடிய இரண்டு முந்தைய ஆட்டங்களில் அணிகள் 170 க்கு மேல் இலக்குகளை வெற்றிகரமாக துரத்தியது. இங்கு முதலில் பேட்டிங் செய்யும் அணிகளின் சராசரி ரன் விகிதம் ஐபிஎல்லில் 8.77 ஆக உள்ளது. இங்கு விளையாடிய 82 ஐபிஎல் போட்டிகளில் 45 ஆட்டங்களில் சேசிங் அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

மேலும் படிக்க: தோனி - சச்சின் மாதிரி நினைச்சுக்காதீங்க ரிங்கு சிங்...உங்களால் இதை மீண்டும் செய்ய முடியாது - சேவாக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (11 வீரர்கள் கணிப்பு):
விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), வெய்ன் பார்னெல், வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், சித்தார்த் கவுல், முகமது சிராஜ்.

டெல்லி கேபிடல்ஸ் (11 வீரர்கள் கணிப்பு):
பிருத்வி ஷா, டேவிட் வார்னர் (கேப்டன்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), மணீஷ் பாண்டே, அக்சர் படேல், லலித் யாதவ், ரிபால் படேல், கலீல் அகமது, குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தபிசுர் ரஹ்மான்.

மேலும் படிக்க: ஏம்பா ரபாடா.. வந்த உடனே சாதனையா? மலிங்கா ரெக்கார்டு காலி - இனி இவர் நம்பர் ஒன்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News