IPL 2023: பத்திரனா குடும்பத்திடம் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!

ஐபிஎல் 2023 இறுதிப் போட்டிக்கு முன்னதாக சென்னையில் மதீஷா பத்திரனாவின் குடும்பத்தினரை எம்எஸ் தோனி சந்தித்தார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 26, 2023, 07:57 AM IST
  • பத்திரனாவை பந்துவீச அனுமதிக்காத நடுவர்கள்.
  • நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனி.
  • ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் விளையாட தடை?
IPL 2023: பத்திரனா குடும்பத்திடம் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்! title=

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) கேப்டன் MS தோனி, இலங்கையின் இளம் வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனாவுக்கு ஐபிஎல் 2023 முழுவதும் மிகப்பெரிய ஆதரவாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். பத்திரனா இந்த சீசன் முழுவதும் நன்றாக பந்து வீசினாலும் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான இறுதிப் பந்தில் ஒரு பவுண்டரியை விட்டுக்கொடுத்து, சேப்பாக்கத்தில் சென்னை தோல்வி அடைந்தது. இருப்பினும் பத்திரனா மீது பெரும் நம்பிக்கை வைத்துள்ளார் தோனி.  மும்பை இந்தியன்ஸ் மற்றும் இலங்கை ஜாம்பவான் லசித் மலிங்காவைப் போலவே பந்துவீச்சு செய்கை கொண்ட 20 வயதான பத்திரனா, இதுவரை 11 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி தோனியின் நம்பிக்கைக்கு ஏற்ப இருந்துள்ளார். இந்த வார தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிபையர் 1 போட்டியில் வென்ற பிறகு தோனி பத்திரனாவின் குடும்பத்தினரை சென்னையில் சந்தித்தார்.

மேலும் படிக்க | தோனியுடன் ஜடேஜா மீண்டும் மோதலா? டிவிட்டர் பதிவும் ரசிகர்களின் ரியாக்ஷனும்..!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vishuka Pathirana (@vishuka_pathirana)

"பத்திரனாவை பற்றி நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை, அவர் எப்போதும் என்னுடன் இருக்கிறார்" என்று தோனி கூறியபோது மல்லி பாதுகாப்பான கைகளில் இருக்கிறார் என்பதை இப்போது நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று பத்திரனாவின் சகோதரி விசுகா இன்ஸ்டாகிராமில் தோனி மற்றும் அவர்களது குடும்பத்தினரின் புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டார். தோனி தான் முதன் முதலில் 20 வயதே ஆனா பத்திரனாவை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, அவரை சிஎஸ்கே அணிக்குள் கொண்டு வந்தார். “பத்திரன ஒரு சிறந்த டெத் பவுலர். மேலும், அவரது பந்து வீச்சில் ரன் எடுப்பது சற்று கடினம். சில சமயம் மெதுவான பந்துகளையும் அவர் வீசுகிறார். எனவே நீங்கள் அவரை மிகவும் கவனமாக கண்காணிக்க வேண்டும். அதாவது, அவர் ஒழுக்கமான வேகத்தில் பந்துவீசும்போது, ​​அவரைத் தொடர்ந்து ரன்கள் அடிப்பது மிகவும் கடினமாகிவிடும், ”என்று தோனி ஐபிஎல் 2023ல் முன்னதாக கூறியிருந்தார்.

GTக்கு எதிரான குவாலிஃபையர் 1ல் தோனி நடுவர்களுடன் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், மேலும் நடுவர்களுடன் நீண்ட விவாதத்திற்காக ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் இருந்து தடையை எதிர்கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்ள நேரிடும். பத்திரனா 8 நிமிடங்கள் மைதானத்திற்கு வெளியே இருந்தார், இதனால் இன்னிங்ஸின் 16 வது ஓவரை அவர் வீச நடுவர்கள் மறுத்துவிட்டனர்.  இருப்பினும் தோனி பேசிய பிறகு அவரை பந்து வீச நாடுகள் அனுமதித்தனர்.  ஐபிஎல் நிபந்தனைகளின்படி, எட்டு நிமிடங்களுக்கு மேல் மைதானத்தை விட்டு வெளியேறும் எந்த வீரரும், திரும்பிய பிறகு, அவர் பந்து வீச அனுமதிக்கப்படும் அதே அளவு நேரம் மைதானத்தில் இருக்க வேண்டும். ஆனால் பத்திரனா திரும்பியதும், குஜராத் டைட்டன்ஸ் 30 பந்துகளில் வெற்றி பெற இன்னும் 71 ரன்கள் தேவை என்ற நிலையில், 16வது ஓவரை வீச வந்தார், அந்த சமயத்தில் போட்டி இரு அணிகளுக்கும் சாதகமாக இருந்தது.  முதல் அணியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இன்று நடைபெறும் குஜராத் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டி ஐபிஎல் இறுதி போட்டியில் சென்னை அணியுடன் யார் விளையாட போகிறார்கள் என்பதை உறுதி செய்யும். 

மேலும் படிக்க | அம்பயர்களுடன் விவாதம்! ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் தோனி விளையாட தடை?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News