Gujarat Titans Qualifies To Finals: நடப்பு ஐபிஎல் தொடரின் கிளைமேக்ஸ் நெருங்கிவிட்டது. இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் தகுதிபெற்ற நிலையில், குவாலிஃபயர் 2 போட்டி அகமதாபாத் நகரின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.
கில் சதம்
அந்த போட்டியின் டாஸை வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. சுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் அவர் 60 பந்துகளில் 129 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதில், 10 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடக்கம். சாய் சுதர்சன் 43 ரன்கள் எடுத்து ஆறுதல் அளிக்க, கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 28 ரன்களை எடுத்தார். இதன்மூலம், 20 ஓவர்களில் குஜராத் 233 ரன்களை குவித்து அசத்தியது. மும்பை அணியில் மத்வால், சாவ்லா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.
மேலும் படிக்க |T20 WC: நான் தேர்வாளராக இருந்தால் கோலியை தேர்வு செய்வேன்! சுனில் கவாஸ்கர் கருத்து
Happy faces after a monumental win #TATAIPL | #Qualifier2 | #GTvMI pic.twitter.com/1Mh1bNaqfD
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
இஷான், கிரீன் காயம்
தொடர்ந்து, மும்பை பீல்டிங்கின்போது இஷான் கிஷனுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் பேட்டிங்கில் களமிறங்கவில்லை. அவருக்கு பதில் மாற்று வீரராக விஷ்ணு வினோத் அறிவிக்கப்பட்டார். இருப்பினும், ரோஹித் உடன் வதேரா ஓப்பனிங்கில் களமிறங்கினார். இதில், வதேரா 4 ரன்களில் ஆட்டமிழக்க கேம்ரூன் கிரீன் களமிறங்கனார். அப்போது, ஹர்திக் வீசிய ஓவரில் பந்து அவரின் கையை பலமாக தாக்கியதில் கிரீனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. இதனால், பெவிலியன் திரும்பினார், கிரீன். தொடர்ந்து, சூர்யகுமார் களமிறங்கிய நிலையில், ரோஹித் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது திலக் வர்மா களத்திற்கு வந்தார்.
திலக் அதிரடி
திலக் வர்மா வந்த உடன் அதிரடி காட்ட தொடங்கினார். அதுவும் ஷமி வீசிய ஐந்தாவது ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் கடைசி பந்தில் சிக்ஸர் என 24 ரன்களை எடுத்து அசத்தினார். ரஷித் வீசிய அடுத்த ஓவரிலும் அவர் பவுண்டரி அடித்திருந்த நிலையில், அதே ஓவரின் கடைசி பந்தில் டக்-அவுட்டாகி ஏமாற்றமளித்தார். அவர் 14 பந்துகளில் 43 எடுத்திருந்தார். திலக் வர்மா வெளியேறியபோது, கிரீன் மீண்டும் களம்கண்டார்.
சூர்யகுமார் மிரட்டல்
இந்த நேரத்தில், கிரீன் உடன் சூர்யகுமார் ஜோடி சேர்ந்து ரன்களை குவித்து வந்தனர். ரன்ரேட்டும் 10 ரன்களில் நிலைத்து நிற்க, 12ஆவது ஓவரை ஜோஷ் லிட்டில் வீசி கிரீன் விக்கெட்டை எடுத்தார். கிரீன் 20 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின்னர், வந்த வினோத் ஒருமுனையில் அமைதி காக்க, மறுமுனையில் சூர்யகுமார் பட்டாசாய் வெடித்தார். அவரும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த நிலையில், மோகித் சர்மா தனது முதல் ஓவரை வீச வந்தார்.
Magical Mohit!
An outstanding five-wicket haul, giving away just 10-runs in a match-winning occasion#TATAIPL | #Qualifier2 | #GTvMI pic.twitter.com/tkEJWkPY9w
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
மோகித் 5 விக்கெட்டுகள்
அந்த 15ஆவது ஓவரின் மூன்றாவது பந்தில் சூர்யகுமார் போல்டாக ஆட்டம் தலைகீழாக மாறியது. அதுவரை மும்பை அணிக்கு பெரும் நம்பிக்கை அளித்த சூர்யகுமார் 38 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 61 ரன்களை எடுத்திருந்தார். இதன்பின்னர், விஷ்ணு வினோத், டிம் டேவிட் என அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 18.2 ஓவர்களில் 171 ரன்களில் மும்பை அணி ஆல்-அவுட்டானது. குஜராத் அணி பந்துவீச்சில் மோகித் சர்மா 5, ஷமி, ரஷித் கான் உள்ளிட்டோர் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
Th
It's going to be the Chennai Super Kings facing the Gujarat Titans in the summit clashBRING. IT. ON pic.twitter.com/FYBhhsN808
— IndianPremierLeague (@IPL) May 26, 2023
இதன்மூலம், நாளை இதே மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. 5ஆவது முறை கோப்பைக்காக சென்னை அணியும், சாம்பியன்ஷிப்பை தக்கவைக்க குஜராத் டைட்டன்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் களமிறங்க உள்ளன.
மேலும் படிக்க | IPL 2023: பத்திரனா குடும்பத்திடம் தோனி சொன்ன முக்கிய விஷயம்! இணையத்தில் வைரல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ