ஏம்பா ரபாடா.. வந்த உடனே சாதனையா? மலிங்கா ரெக்கார்டு காலி - இனி இவர் நம்பர் ஒன்..!

ஐபிஎல் வரலாற்றில் அதிகவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ரபாடா முதல் இடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் மலிங்காவின் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 14, 2023, 08:20 AM IST
  • காகிசோ ரபாடா புதிய சாதனை
  • மலிங்கா சாதனையை தகர்த்தார்
  • பஞ்சாப் அணிக்கு களமிறங்கி அசத்தல்
ஏம்பா ரபாடா.. வந்த உடனே சாதனையா? மலிங்கா ரெக்கார்டு காலி - இனி இவர் நம்பர் ஒன்..! title=

ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக காகிசோ ரபாடா களமிறங்கினார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான அந்த போட்டியில் விருத்திமான் சஹா விக்கெட்டை அவர் வீழ்த்தினார். அப்போது ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனைப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த மலிங்காவை பின்னுக்கு முதல் இடத்தில் அமர்ந்தார் ரபாடா.  

குஜராத் அணி வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த தொடரின் வலுவான அணிகளில் ஒன்றாக இருக்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி, இப்போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. 4வது போட்டியில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு இது 3வது வெற்றியாகும். பஞ்சாப் அணிக்கு இது 2வது தோல்வியாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 153 ரன்கள் எடுத்தது. இதனை ஒரே ஒரு பால் மீதம் வைத்து குஜராத் அணி சேஸ் செய்தது. 

மேலும் படிக்க | IPL 2023: சென்னை அணிக்கு பெரிய அடி... தொடரில் இருந்து விலகுகிறாரா தோனி?

ரபாடா சாதனை

ஐபிஎல் தொடரில் இந்த முறை பஞ்சாப் அணிக்காக விளையாடும் ரபாடா, முதன்முறையாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் களம் கண்டார். சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 9 ரன்ரேட் அடிப்படையில் ரன்களை விட்டுக் கொடுத்தார். 4 ஓவர்களை வீசிய அவர் மொத்தம் 36 ரன்களை விட்டுக் கொடுத்தார். இது பஞ்சாப் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இருப்பினும் ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை அவர் படைத்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் லசித் மலிங்கா முதல் இடத்தில் இருந்தார். அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடும்போது 70 இன்னிங்ஸில் இந்த சாதனையை படைத்திருந்தார். இப்போது 64வது இன்னிங்ஐஸிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தி அவருடைய சாதனையை முறியடித்து முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறார் ராபாடா.  

ஹர்ஷல் படேல் 3வது இடத்தில்

இந்திய பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை ஹர்ஷல் படேல் 3வது இடத்தில் இருக்கிறார். அவர் 79 இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை எடுத்தார். சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வரும் புவனேஷ்வர் குமார் 81 போட்டிகளிலும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் ரஷித் கான் 83 போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கின்றனர். இதேபோல், அமித் மிஸ்ரா மற்றும் ஆஷீஸ் நெகரா ஆகியோர் முறையே 83 இன்னிங்ஸில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கின்றனர்.

குஜராத் அபார ஆட்டம்

இந்த போட்டியை பொறுத்தவரைக்கும் குஜராத் அணி பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடியது. முதலில் பந்துவீசும்போது கட்டுக்கோப்பாக பந்துவீசி முன்னணி வீரர்களை விரைவாக ஆட்டமிழக்க செய்தனர். இதனால் அந்த அணியால் எதிர்பார்த்தளவு அதிக ரன்களை குவிக்க முடிவயவில்லை. 153 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்த நிலையில், குஜராத் அணியில் சுப்மன் கில் பொறுப்பாகவும், நிதானமாகவும் விளையாடி சேஸிங்கிற்கு அடித்தளம் இட்டார். 

பின்னர் வந்த வீரர்களும் சிறப்பாக விளையாட அந்த அணியால் வெற்றி பெற முடிந்தது. இன்னும் ஒரு விக்கெட்டை இறுதிக் கட்டத்தில் பஞ்சாப் அணி எடுத்திருந்தால், அந்த அணிக்கும் வெற்றி பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ். பஞ்சாப் 6வது இடத்தில் இருக்கிறது. 

மேலும் படிக்க | PBKS vs GT: பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடிய குஜராத் டைட்டன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News