IPL Orange Cap: ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தியா எங்கும் 12 நகரங்களில் இத்தொடரில் நடைபெறும் நிலையில், இத்தொடர் மீதான எதிர்பார்ப்பு தற்போது எகிறியுள்ளது. இதுவரை ஒன்றாக இருந்த இந்திய ரசிகர்கள் இனி, தங்களுக்கு பிடித்த வீரர்கள் இருக்கும் அணியை தூக்கிப்பிடிக்க தொடங்கிவிடுவார்கள்.
அந்த வகையில், ஐபிஎல் தொடருக்கு என்றே இருக்கும் பல சுவாரஸ்ய தகவல்களையும், புள்ளிவிவரங்களையும் அறிந்துகொள்வதில் ரசிகர்கள் எப்போதும் ஆர்வமாக இருப்பார்கள். இந்நிலையில், ஐபிஎல் தொடரில், அதிக ரன்களை எடுக்கும் பேட்டர்களுக்கு வழங்கப்படும் ஆரஞ்சு நிற தொப்பி குறித்தும், கடந்த 15 சீசன்களில் ஆரஞ்சு தொப்பி மீதான பல சுவாரஸ்ய தகவல்களையும் இதில் காணலாம்.
முதல் தொப்பி!
ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், அந்த முதல் தொடரில் இருந்தே ஆரஞ்சு தொப்பி வழங்கப்பட்டு வருகிறது. அந்த தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் (தற்போது பஞ்சாப் கிங்ஸ்) அணிக்காக விளையாடிய ஷான் மார்ஷ் கைப்பற்றினார். அவர் 11 போட்டிகளில் விளையாடி 616 ரன்களை குவித்திருந்தார். இவர், சமீபத்தில் இந்தியா உடனான ஒருநாள் தொடரில் மிகச்சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷின் மூத்த சகோதரர் ஆவார்.
விராட் 973
2016ஆம் ஆண்டில் ரன் மெஷின் விராட் கோலி, ஐபிஎல் தொடரில் ரன்களை குவித்துக்கொண்டிருந்தார் எனலாம். அந்த தொடரில் அவர் 4 சதங்கள் உள்பட 16 போட்டிகளில் 973 ரன்களை குவித்து, ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். இதன்மூலம், ஒரே தொடரில் அதிக ரன்களை குவித்து, ஆரஞ்சு தொப்பியை வென்றவர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார். ஆனால், அதுதான் அவர் வாங்கிய முதல் ஆரஞ்சு தொப்பி. அதன்பின்னரும், அவர் அதை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வார்னர் 'தி பாஸ்'
ஆனால், இவர்களையெல்லாம் மிஞ்சியவர், ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வீரர் டேவிட் வார்னர்தான். 2015, 2017, 2019 ஆகிய சீசன்களில் முறையே 562, 641, 692 ரன்களை எடுத்து மூன்று முறை ஆரஞ்சு தொப்பியை வாங்கியுள்ளார். இவர்தான் அதிக முறை ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்றியவர் ஆவார். இவரை அடுத்து, 'யூனிவெர்சல் பாஸ்' கிறிஸ் கெயில் 2011, 2012 சீசனில் முறையே 608, 733 ரன்களை குவித்து இரண்டு முறை, அதுவும் தொடர்ந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றியுளளார்.
டெல்லி பரிதாபம்!
அணி தரப்பில் பார்த்தால், நான்கு முறை ஹைதராபாத் அணியும், தலா மூன்று முறை சென்னை, பெங்களூரு அணிகளும், மூன்று முறை பஞ்சாப் அணியும் கைப்பற்றியுள்ளன. இதை தவிர, கொல்கத்தா, மும்பை, ராஜஸ்தான் ஆகிய அணிகள் தலா ஒரு முறை அதனை பெற்றுள்ளனர். கடந்த 15 சீசன்களாக விளையாடி வரும் டெல்லி அணி சார்பில் யாரும் இதுவரை ஆரஞ்சு தொப்பியை வாங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | IPL 2023: தோனி கோப்பையை வெல்ல மாட்டார்: ஸ்ரீ சாந்த் வந்ததும் சொன்ன அதிரடி கருத்து
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ