சென்னையில் நடக்கவிருக்கும் IPL போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் நடக்கும் IPL போட்டிகளைப் புறக்கணிக்க வேண்டும் என்றும், தடை செய்ய வேண்டும் தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதனை மீறி போட்டிகளை நடத்தினால் கிரிக்கெட் மைதானத்தில் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
இதனையடுத்து நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைப்பெற்ற போட்டியிலும் தமிழக இளைஞர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வைகையினில் வீரர்களின் மீது காலணிகளை வீசினர். எனினும் பெரும் சர்சைக்கிடையில் போட்டிகள் நடந்து முடிந்தன.
இந்நிலையில் வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி மீண்டும் சென்னையில் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையே போட்டி நடைப்பெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனைகள் தொடங்கவிருந்த நிலையில் தற்போது இப்போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது.
IPL matches scheduled to be held in Chennai, to be shifted to another venue: Sources #CauveryProtests pic.twitter.com/RkNBPxk6hn
— ANI (@ANI) April 11, 2018
இதனையடுத்து சென்னையில் நடக்கவிருக்கும் IPL போட்டிகளை வேறு மாநிலத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போட்டிகள் விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைப்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.