IPL Auction 2024: இந்தியன் பிரீமியர் லீக் கேஷ் ரிச் லீக் (Cash Rich League) என்று அழைக்கப்படுகிறது. ஐசிசி நடத்தும் தொடர்களை விட பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் மூலம் அதிக அளவில் வருவாய் கிடைக்கிறது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாட வீரர்கள் விரும்புகிறார்கள். இதன் மூலம் அவர்கள் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்கின்றனர்.
அதேநேரத்தில் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது. அதாவது இந்தியாவில் கிரிக்கெட்டின் மீது மக்கள் பைத்தியம் பிடித்துள்ளனர் எனக் கூறலாம். 2023 இல் 130 மில்லியன் மக்கள் ஐபிஎல் தொடரை ஆன்லைனில் பார்த்துள்ளனர்.
2008 முதல் 2023 வரை நடந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமை இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் வசம் உள்ளது. கடந்த ஆண்டு ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து சாம் கர்ரனை 18.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. அதேபோல ஐபிஎல் 2023 ஏலங்கள் பல சாதனைகளை முறியடித்தன. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்ட 20 வீரர்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல் (2008 - 2023) (மதிப்பு ரூபாயில்)
1. சாம் கர்ரன் - 18.50 கோடி - பஞ்சாப் கிங்ஸ் - 2023
2. கேமரூன் கிரீன் - 17.50 கோடி - மும்பை இந்தியன்ஸ் - 2023
3. விராட் கோலி - 17 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2018
4. கேஎல் ராகுல் - 17 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 2022
5. பென் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 2023
6. கிறிஸ் மோரிஸ் - 16.25 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ் - 2021
7. யுவராஜ் சிங் - 16 கோடி - டெல்லி டேர்டெவில்ஸ் - 2015
8. ரவீந்திர ஜடேஜா - 16 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 2022
8. ரிஷப் பந்த் - 16 கோடி - டெல்லி கேபிடல்ஸ் - 2022
9. ரோஹித் சர்மா - 16 கோடி - மும்பை இந்தியன்ஸ் - 2022
10. நிக்கோலஸ் பூரன் - 16 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 2023
11. பேட் கம்மின்ஸ் - 15.50 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2020
12 இஷான் கிஷன் - 15.25 கோடி - மும்பை இந்தியன்ஸ் - 2022
13. எம்எஸ் தோனி - 15 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 2018
14. கைல் ஜேமிசன் - 15 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2021
15. ரஷித் கான் - 15 கோடி - குஜராத் டைட்டன்ஸ் - 2022
16. ஹர்திக் பாண்டியா - 15 கோடி - குஜராத் டைட்டன்ஸ் - 2022
17. பென் ஸ்டோக்ஸ் - 14.5 கோடி - ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - 2017
18. கிளென் மேக்ஸ்வெல் - 14.25 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2021
19. கேன் வில்லியம்சன் - 14 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 2022
20. சஞ்சு சாம்சன் - 14 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ் - 2022
மேலும் படிக்க - IPL 2024 மினி ஏலத்தில் சிஎஸ்கே குறி வைக்கும் 4 வீரர்கள்...!
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியல் (மதிப்பு ரூபாயில்)
விராட் கோலி - 17 கோடி - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2018
கேஎல் ராகுல் - 17 கோடி - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 2022
யுவராஜ் சிங் - 16 கோடி - டெல்லி டேர்டெவில்ஸ் - 2015
ரவீந்திர ஜடேஜா - 16 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 2022
ரிஷப் பந்த் - 16 கோடி - டெல்லி கேபிடல்ஸ் - 2022
ரோஹித் சர்மா - 16 கோடி - மும்பை இந்தியன்ஸ் - 2022
இஷான் கிஷன் - 15.25 கோடி - மும்பை இந்தியன்ஸ் - 2022
எம்எஸ் தோனி - 15 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 2018
ஹர்திக் பாண்டியா - 15 கோடி - குஜராத் டைட்டன்ஸ் - 2022
சஞ்சு சாம்சன் - 14 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ் - 2022
தீபக் சாஹர் - 14 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் - 2020
தினேஷ் கார்த்திக் - 12.50 கோடி - டெல்லி டேர்டெவில்ஸ் - 2014
ஷ்ரேயாஸ் ஐயர் - 12.25 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2022
மேலும் படிக்க - IPL 2024: இந்த ஆண்டு ஐபிஎல்-லில் விளையாடுவாரா ரிஷப் பண்ட்? முக்கிய அப்டேட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ