IPL 2024 Full Schedule: ஐபிஎல் 2024 தொடங்கும் தேதி மற்றும் முழு அட்டவணை!

IPL 2024 Full Schedule: இந்த ஆண்டு இந்தியாவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் 2024 போட்டிகள் மார்ச் மாதம் தொடங்கி மே வரை நடைபெற உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Feb 13, 2024, 06:33 AM IST
  • இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் 2024 போட்டி.
  • சென்னை அணி கடந்த முறை வெற்றி பெற்றது.
  • மார்ச் 22ம் தேதி போட்டி தொடங்க உள்ளது.
IPL 2024 Full Schedule: ஐபிஎல் 2024 தொடங்கும் தேதி மற்றும் முழு அட்டவணை! title=

IPL 2024 Full Schedule: இந்தியன் பிரீமியர் லீக் 2024 வரும் மார்ச் 22 முதல் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 17வது சீசனுக்கான ஐபிஎல் போட்டிக்கான அட்டவணையை விரைவில் அறிவிக்க உள்ளது. மேலும், பெண்களுக்கான WPL 2024 போட்டிகள் பிப்ரவரி 23 முதல் மார்ச் 17 வரை நடைபெற உள்ளது.  ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளதால் இடையில் ஐபிஎல் போட்டிகளுக்கு பிரேக் விடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மொத்தம் 10 அணிகள் 70 லீக் ஆட்டங்களில் விளையாட உள்ளது. முதலில் இரண்டு தகுதிச் சுற்று, எலிமினேட்டர் மற்றும் இறுதிப் போட்டி உட்பட நான்கு நாக் அவுட் போட்டிகளில் விளையாடும்.

மேலும் படிக்க | சென்னை சூப்பர் கிங்ஸ் 13வது முறையாக இதனை நிச்சயம் செய்யும்: சுனில் கவாஸ்கர்

சென்னை அணி சாம்பியன்

எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று இருந்தது.  இதனால் முதல் போட்டியில் சென்னை அணி விளையாடும். மும்பை அல்லது ஆர்சிபி அணிக்கு எதிராக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஐபிஎல் 2024 போட்டிகளை நிச்சயம் இந்தியாவில் தான் நடத்துவோம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளது.  கடந்த 2019ம் ஆண்டும் இதே போல் நடைபெற்று இருந்தது.  கடந்த ஆண்டு போலவே ஐபிஎல் 2024 போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7:30 மணிக்கு தொடங்கும், டாஸ் 7 மணிக்கு போடப்படும். மே மாதம் 26ம் தேதி பைனல் போட்டியை நடந்த திட்டமிட்டுள்ளது.

மும்பை கேப்டன் மாற்றம்

இந்த ஆண்டு ஐபிஎல்லில் பல சுவாரஸ்ய நிகழ்வுகள் நடைபெற உள்ளது.  கடந்த மெகா ஏலத்தில் குஜராத் அணி ஹர்திக் பாண்டியவை தங்கள் அணியில் எடுத்தது.  ஐபிஎல் 2022 கோப்பையையும், ஐபிஎல் 2023ல் இறுதி போட்டிக்கு தனது அணியை கொண்டு சென்றார் பாண்டியா. தற்போது இந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக விளையாட உள்ளது.  5 முறை கோப்பைகளை பெற்று தந்த ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  கேமரூன் கிரீனை ஆர்சிபிக்கு கொடுத்துவிட்டு ஹர்திக்கை வாங்கி உள்ளது மும்பை இந்தியன்ஸ். இதில் பல மும்பை ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர்.

தோனி ஓய்வு?

இந்த ஆண்டு ஐபிஎல் முதல் தோனி ஓய்வு பெற உள்ளார் என்ற தகவல் உள்ளது. கடந்த ஆண்டே ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தனது ரசிகர்களுக்காக மீண்டும் விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு சென்னை அணியின் 5வது கோப்பையை பெற்று தந்தார் தோனி. 42 வயதான அவர் தற்போது பேட்டிங் பயிற்சியில் களமிறங்கி உள்ளார்.  வரும் மார்ச் 1 முதல் சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.  

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விவரம்:

தோனி (கேப்டன்), மொயீன் அலி, தீபக் சாஹர், டெவோன் கான்வே, துஷார் தேஷ்பாண்டே, ஷிவம் துபே, ருதுராஜ் கெய்க்வாட், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ரவீந்திர ஜடேஜா, அஜய் மண்டல், முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, அஜிங்க்யா ரஹானே, ஷேக் சிங் ரஷீத், ஷேக் சிங் ரஷீத், எம். , நிஷாந்த் சிந்து, பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, ரச்சின் ரவீந்திரா, ஷர்துல் தாக்கூர், டேரில் மிட்செல், சமீர் ரிஸ்வி, முஸ்தபிசுர் ரஹ்மான், அவனிஷ் ராவ் ஆரவெல்லி.

மேலும் படிக்க | புஜாரா எங்களுக்கு ட்ரீட் கொடுப்பாருனு எதிர்பார்க்கிறோம் - அஸ்வின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News