9 ஆண்டுகளாக ஆர்சிபியை துரத்தும் சோகம்! பெங்களூருவில் கொடி பறக்கவிடும் கேகேஆர்

IPL 2024: Kolkata Knight Riders (KKR): ஐபிஎல் தொடரில் 2015 ஆண்டு முதல் கொல்கத்தா அணியை ஒருமுறைகூட தங்களின் சொந்த மைதானமான பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஆர்சிபி அணி தோற்கடித்தது இல்லை.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2024, 12:53 PM IST
  • 9வது ஆண்டாக கேகேஆர் அணி வெற்றி
  • தொடர்ச்சியாக தோல்வியடையும் ஆர்சிபி
  • 2015 முதல் பெங்களூருவில் வென்றதில்லை
9 ஆண்டுகளாக ஆர்சிபியை துரத்தும் சோகம்! பெங்களூருவில் கொடி பறக்கவிடும் கேகேஆர் title=

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணிக்கும், கொல்கத்தா அணிக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம் தான். அதற்கு காரணம் ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி, கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர். இருவரும் டெல்லியைச் சேர்ந்தவர்கள் என்றாலும் எலியும் பூனையுமாக சண்டை போட்டுக் கொண்டே இருப்பார்கள். கம்பீர் சீனியர் என்பதால் ஜூனியர் விராட் கோலியிடம் மரியாதை கொடுக்க வேண்டும், தனக்கு கீழ் தான் நீ என்கிற தொனியிலேயே அவரை ட்ரீட் செய்வார். மரியாதை வேண்டுமானால் கொடுக்கிறேன், ஆனால் நீ பெரியவன் என்கிற போக்கில் என்னை நடத்தினால் பதிலடி நிச்சயம் கொடுப்பேன் என முகத்துக்கு நேராகவே பலமுறை சொல்லிவிட்டார் விராட். 

மேலும் படிக்க | சின்னசாமியில் ஆர்சிபியை மீண்டும் சின்னாபின்னமாக்கிய கேகேஆர் - நொந்து போன விராட் கோலி!

இந்த பஞ்சாயத்து ஐபிஎல் அணிகளுக்கு இருவரும் கேப்டனாக ஆனபோது இன்னும் உட்சத்தை தொட்டது. ஆர்சிபி, கேகேஆர் அணிகள் மோதிக் கொள்ளும்போதேல்லாம் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம், வார்த்தைப் போர் இல்லாமல் போட்டியே நடக்காது. கம்பீர் ஒருமுறை வம்பு செய்தால், விராட் அடுத்தமுறை டபுள் மடங்காக பதிலடி கொடுப்பார். ஒருமுறை இருவருக்கும் இடையில் கைகலப்பு ஆகும் அளவுக்கு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே மோதல் உருவானது. பின்னர் சக வீரர்கள் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீரை சமாதானப்படுத்தினர். அந்த மோதல் பின்னர் கிரிக்கெட் களத்துக்கும் வெளியேயும் தொடர்ந்தது.

எவ்வளவு தான் விராட் கோலி இந்திய அணிகாக சிறப்பாக விளையாடினாலும் கவுதம் கம்பீர் அதனை பாராட்டாமல் வேண்டுமென்றே விமர்சிப்பார். இந்திய அணியின் வெற்றிக்கு சிறப்பாக ஆடிய விராட் கோலியை தவிர்த்துவிட்டு அன்றைய போட்டியில் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்தும் மற்ற வீரர்களே காரணம் என சொல்வார். இந்த சண்டைக்கு ஒரு என்டே இல்லையா? என்ற அளவுக்கு இத்தனை ஆண்டுகளாக சென்று கொண்டிருந்தது. ஆனால், இந்த ஐபிஎல் 2024 போட்டியில் கம்பீர், விராட் கோலி இருவரும் மைதானத்திலேயே கட்டிப்பிடித்தும், கைகுலுக்கியும் மோதலை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். கிரிக்கெட் ரசிகர்கள் இதனை மகிழ்ச்சியாக கொண்டாடும் அதேவேளையில் கம்பீர் தனக்கு ஆர்சிபி அணி மீது இருக்கும் கோபத்தையும் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வெல்லவில்லை என்றாலும் மிக சிறப்பாக அணியாகவே நான் பார்க்கிறேன் என கூறியிருக்கும் கம்பீர், அதனால் அந்த அணியுடன் எப்போது மோதினாலும் கட்டாயம் தோற்கடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பேன் என கூறியிருக்கிறார். கனவில் கூட ஆர்சிபி அணியை தோற்கடிக்க வேண்டும் என்று மட்டுமே நினைப்பேன் என்றும் அந்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியது போலவே  2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆர்சிபி அணியின் சொந்த மைதானமாக பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் கொல்கத்தா அணி மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அதாவது 9 ஆண்டுகளாக ஆர்சிபி அணியின் கோட்டையில் கொல்கத்தா அணயின் கொடியே பறந்து கொண்டிருக்கிறது. 

வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியிலும் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்திவிட்டது. இதனால் வெம்பிபோய் இருக்கும் ஆர்சிபி ரசிகர்கள் இந்த சோகத்துக்கு ஒரு முடிவிலையா? என குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க | RCB vs KKR: ஆஹா கண்கொள்ளா காட்சி... விராட் கோலியை கட்டிபிடித்த கௌதம் கம்பீர்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News