IPL 2024 Final date: ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறும் தேதி இதுதான்..!

IPL 2024 Final Date: ஐபிஎல் 2024 லீக் தேதிகளை பிசிசிஐ தயாராக வைத்திருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் அதில் சில மாற்றங்களை மட்டும் செய்து தேதிகள் வெளியாக இருக்கிறது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 15, 2024, 08:33 AM IST
  • ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி எப்போது தெரியுமா?
  • உத்தேச தேதியை அனுப்பி வைத்த பிசிசிஐ
  • மே 26 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெற வாய்ப்பு
IPL 2024 Final date: ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறும் தேதி இதுதான்..! title=

IPL 2024 Full Schedule: ஐபிஎல் 2024 லீக் மெகா கிரிக்கெட் திருவிழா எப்போது தொடங்கும் என்பது தான் கிரிக்கெட் ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஐபிஎல் தொடருக்கான தேதிகளை பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் தயார் செய்து கையில் வைத்திருந்தாலும், இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அந்த தேதிகளை தேர்தல் ஆணையம் வெளியிட்ட பிறகு, அதில் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்து அதிகாரப்பூர்வமாக ஐபிஎல் 2024 தொடருக்கான தேதிகளை வெளியிட பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது. அத்துடன் இந்தியாவிலேயே ஐபிஎல் தொடர் முழுவதுமாக நடத்தப்படும் என பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடங்கும் தேதி

ஐபிஎல் 2024 தொடரை மார்ச் 22 ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டமிட்டிருக்கிறது. இது குறித்து பிசிசிஐ மற்றும் ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளுடனும் கலந்தாலோசனை நடத்தியது. இதன் பிறகு உத்தேச தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட அணிகளுக்கு பிசிசிஐ தெரியப்படுத்தியுள்ளது. அதில் மார்ச் 22 என்பது தான் இப்போதைய முடிவாக இருக்கிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட இருப்பதால், அந்த தேதிகளின் அடிப்படையில் எங்கு ஐபிஎல் தொடக்க போட்டிகளை நடத்துவது என்பது மட்டும் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. 

மேலும் படிக்க | IPL 2024 Full Schedule: ஐபிஎல் 2024 தொடங்கும் தேதி மற்றும் முழு அட்டவணை!

ஐபிஎல் 2024 பாதியில் நிறுத்தம்

ஐபிஎல் 2024 லீக் தொடர்ந்து நடைபெறாது என்ற தகவலும் வெளியாகியுள்ளது. தேர்தலுக்கு ஏற்ப இடையே சில நாட்கள் பிரேக் விட்டு நடத்துவது குறித்தும் பிசிசிஐ ஆலோசித்திருக்கிறது. அதேநேரத்தில் தேர்தல் நடைபெறும் மாநிலங்களை தவிர்த்து எஞ்சிய மைதானங்களில் ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து நடத்தவும்  ஆலோசிக்கப்பட்டு இருக்கிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு எந்த வகையிலும் இடையூறு இருக்ககூடாது என்பதால் இது குறித்து மத்திய அரசுடனும் பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். ஏனென்றால் தேர்தல் நேரத்தில் பாதுகாப்பு பிரச்சனை எழ வாய்ப்பு இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு ஐபிஎல் 2024 லீக் தேதிகள் இறுதி செய்யப்பட இருக்கிறது. 

ஐபிஎல் இறுதிப் போட்டி எப்போது?

இப்போதைய சூழலில் ஐபிஎல் 2024 லீக் தொடரின் இறுதிப் போட்டி மே 26 ஆம் தேதி நடத்த பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் உத்தேச அட்டவணை பட்டியலிலும் இந்த தேதி தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த நேரத்தில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதால், ஏறக்குறைய மே 26 ஆம் தேதி தான் இந்தியாவில் ஐபிஎல் 2024 இறுதிப் போட்டி நடைபெறும் என முடிவாகியுள்ளது.  

மேலும் படிக்க | 'டி20 உலகக் கோப்பையில் இவர் தான் கேப்டன்...' உண்மையை போட்டுடைத்த ஜெய் ஷா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News