IPL 2023: ஐபிஎல்லில் நடைமுறைக்கு வரும் முக்கிய விதி... அம்பயர்கள் தப்பு பண்ணா காலி

ஐபிஎல் 2023-ல் இந்த ஆண்டு முதல் புதிய விதிமுறை நடைமுறைக்கு வர இருக்கிறது. அம்பயர்கள் தவறாக நோபால் மற்றும் வைடு கொடுத்தால் அல்லது கொடுக்கவில்லை என்றால் அதனை எதிர்த்து அப்பீல் செய்யலாம்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 7, 2023, 04:14 PM IST
IPL 2023: ஐபிஎல்லில் நடைமுறைக்கு வரும் முக்கிய விதி... அம்பயர்கள் தப்பு பண்ணா காலி title=

ஐபிஎல் 2023 பல புதுமைகளுடன் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு புதிய விதியாக நோபால் மற்றும் வைடுகளை மதிப்பாய்வு செய்யலாம். கள நடுவர்கள் தவறாக வைடு மற்றும் நோபால் கொடுத்தால் அல்லது கொடுக்கவில்லை என்றால் சம்பந்தப்பட்ட அணி அதனை எதிர்த்து மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்யலாம். இந்த நடைமுறை கிரிக்கெட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என யூகிக்கப்படுகிறது. கள நடுவர்களின் தவறான முடிவுகளால் பல போட்டிகளில் முடிவுகளே மாறியிருக்கின்றன. இக்கட்டான சூழலில் கள நடுவர்கள் வைடு மற்றும் நோபால் கொடுத்தாலோ அல்லது கொடுக்கவில்லை என்றாலோ, அந்த ஒரு பந்து போட்டியின் முடிவை மாற்றியிருக்கிறது. 

மேலும் படிக்க | IPL 2023: பவுலராக மாறிய தோனி; சேப்பாக்கத்தில் பவுலிங் செய்யும் வீடியோ இதோ

இப்படியான சம்பவங்கள் பல முறை சர்வதேச மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் நடைபெற்று இருப்பதால், இதற்கு முடிவு கொண்டு வந்திருக்கிறது ஐபிஎல். ஏற்கனவே பெண்கள் ப்ரீமியர் லீக்கில் இந்த நடைமுறை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது. விரைவில் தொடங்க இருக்கும் ஆண்களுக்கான ஐபிஎல் தொடரிலும் புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது. இந்த ஒரு விதி நிச்சயமாக போட்டிகளின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர். 

இந்த விதிமுறை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பெண்கள் ஐபிஎல் தொடரில் உபயோகப்படுத்தப்பட்டது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதல் இன்னிங்ஸின் இறுதி ஓவரில் மூன்றாவது பந்து புல்டாசாக வீசப்பட்டது. இதனை நோபால் கேட்டு பந்தை எதிர்கொண்ட ஆர்சிபியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் டிஆர்எஸ் எடுத்தார். அந்த பந்து மறுப்பதிப்பாய்வு செய்யப்பட்டு முடிவு கொடுக்கப்பட்டது. ஆண்களுக்கான ஐபிஎல் 2023 தொடர் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் களம் காண்கின்றன. முன்னாள் சாம்பியனும், இந்நாள் சாம்பியனும் களமிறங்க இருப்பதால் போட்டியை ஆவலுடன் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

மேலும் படிக்க | IND vs AUS: 4வது டெஸ்டுக்குப் பிறகு டெஸ்டில் இருந்து ஓய்வு பெறக்கூடிய 3 இந்திய வீரர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News