ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த சீசனில் இதுவரை ஒரு முறை மட்டுமே டாஸை வென்ற சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் டாசில் தோல்வியுற்றார். டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பீல்டிங் தேர்வு செய்தார்.
மேலும் படிக்க | மீண்டும் பவுலிங்கில் சொதப்பல்! சிஎஸ்கே-விற்கு எமனாக வந்த ரஷித் கான், மில்லர்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஓபனிங் சிறப்பாக அமைந்தது. ஜோஸ் பட்டிலர் மற்றும் படிக்கல் ராஜஸ்தான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். 24 ரன்களில் படிக்கல் அவுட் ஆகி வெளியேறினார், அதன்பின்பு ஜோடி சேர்ந்த பட்லர் மற்றும் கேப்டன் சாம்சங் அதிரடியாக ரன்களை குவித்தனர். 19 பந்துகளில் 38 ரன்களை குவித்தார் சாம்சங். மறுமுனையில் அதிரடி காட்டிய ஜோஸ் பட்லர் 61 பந்துகளில் 103 ரன்கள் குவித்தார். ஜோஸ் பட்லரின் அதிரடியால் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது. ஹெட்மையர் கடைசியில் அதிரடி காட்ட ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது.
@josbuttler led the charge with the bat & scored a fantastic hundred as @rajasthanroyals posted the highest total of the #TATAIPL 2022 on the board
The @KKRiders chase will begin soo #RRvKKR
Scorecard https://t.co/f4zhSrBNHi pic.twitter.com/z4jVJZxfFb
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
கடினமான இலக்கை எதிர்த்து ஆடிய கொல்கத்தா அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஆரோன் பின்ச் சிங்கில் ஓட முயல சுனில் நரேன் எதிர்பாராதவிதமாக ரன் அவுட்டானார். இந்த போட்டியில் ஒரு பந்து கூட பிடிக்காமல் சுனில் நரைன் வெளியேறினார். அதன் பின் ஜோடி சேர்ந்த ஆரோன் பின்ச் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 28 பந்துகளில் அரை சதம் அடித்த ஆரோன் பின்ச் 58 ரன்களில் வெளியேறினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஸ்ஸல் முதல் பந்திலேயே அஸ்வினால் போல்ட் ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் வில, மறுபுறம் தனது கேப்டன் இன்னிங்சை ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 51 பந்துகளில் 85 ரன்கள் எடுத்தார். விக்கெட்கள் விழுந்தாலும் ரன் ரேட்டை விடாமல் அடித்து வந்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்.
HAT-TRICK for @yuzi_chahal!
Absolute scenes at the Brabourne Stadium - CCI.
Brilliant stuff from the @rajasthanroyals spinner.
Follow the match https://t.co/f4zhSrBfRK#TATAIPL | #RRvKKR pic.twitter.com/jGX1dhgvLD
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
17வது ஓவரை வீசிய யுஸ்வேந்திர சாஹல் இந்த போட்டியை ராஜஸ்தான் ராயல்ஸ் பக்கம் திருப்பினார். ஒரே ஓவரில் ஒரு ஹாட்ரிக் மற்றும் ஒரு விக்கெட் என மொத்தம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஒரே ஓவரில் வெங்கடேச ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர், சிவமணி மற்றும் பேட் கம்மின்ஸ் என 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஓவரிலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி உறுதியானது. இருப்பினும் கடைசியில் அதிரடி காட்டிய உமேஷ் யாதவ் 9 பந்துகளில் 21 ரன்கள் குவித்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கொல்கத்தா அணி 19.4 ஓவரில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இதனால் இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது.
WHAT. A. GAME! WHAT. A. FINISH!
The -year celebration of the IPL done right, courtesy a cracker of a match! @rajasthanroyals hold their nerve to seal a thrilling win over #KKR.
Scorecard https://t.co/f4zhSrBNHi#TATAIPL | #RRvKKR pic.twitter.com/c2gFuwobFg
— IndianPremierLeague (@IPL) April 18, 2022
மேலும் படிக்க | இதை செய்தால் மும்பை சென்னை அணிகள் பிளேஆப்பிற்கு தகுதி பெறலாம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR