IPL 2022 மைதானத்தில் ரசிகர்களை ஏமாற்றிய ரோஹித் சர்மா!

மும்பை மற்றும் லக்னோ அணிகள் இன்று விளையாடுகின்றன.  

Written by - RK Spark | Last Updated : Apr 16, 2022, 06:16 PM IST
  • மும்பை அணி தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி.
  • இன்று லக்னோ அணியுடன் மோதுகிறது.
  • ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.
IPL 2022 மைதானத்தில் ரசிகர்களை ஏமாற்றிய ரோஹித் சர்மா! title=

ஐபிஎல் 2022-ல் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்த மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராகவும் ஏமாற்றத்துடன் தொடங்கியது. டாஸ் வென்று மும்பை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.  பவர் பிளே முடிவில் 57/1 என்ற நிலையில் இருந்ததால் எல்எஸ்ஜி சிறப்பாக தொடங்கியது. இருப்பினும், ரோஹித் சர்மா ரசிகர்களை மகிழ்விக்க ஒரு விசயத்தை செய்தார்.  ஃபீல்டர்கள் வழக்கமாக ஒரு கேட்சை எடுத்த பிறகு கொண்டாடுவார்கள். ஆனால் ரோஹித் ஷர்மா தரையில் பட்டு வந்த கேட்சை பிடித்து விட்டு கொண்டாடினார்.  

மேலும் படிக்க | சச்சின் தெண்டுல்கரின் வருங்கால மருமகன் இவரா?

முருகன் அஸ்வின் போட்டியின் ஏழாவது ஓவரை வீசினார், மனிஷ் பாண்டே ஸ்டிரைக்கில் இருந்தார், அவர் கவர் டிரைவ் ஆட முயன்றார். ரோஹித் சர்மா கவரில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார், மனிஷ் பாண்டே அடித்த கவர் டிரை தரையில் பட்டு ரோஹித் சர்மா கைக்கு சென்றது.  ரோஹித் விக்கெட் விழுந்தது போல் கொண்டாடத் தொடங்கினார். மைதானத்தில் இருந்த ரசிகர்களும் விக்கெட் விழுந்து விட்டது என்று எண்ணி கொண்டாட தொடங்கினர்.  பிறகு இல்லை என்று தெரிந்ததும் ஏமாற்றம் அடைந்தனர்.  

 

சிறப்பாக விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து 199 ரன்களை குவித்தது.  அதிரடியாக விளையாடிய கேஎல் ராகுல், தனது 100வது போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.  60 பந்துகளில் 5 சிஸ்சர், 9 பவுண்டரில் உட்பட 103 ரன்கள் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.  தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்த மும்பை அணி இந்த போட்டியில் வெற்றி பெறலாம் என்று இருந்தது.  ஆனால், ராகுல் அதனை எளிதாக இல்லாத படி செய்துள்ளார்.  

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸ் பற்றி சச்சின் தெண்டுல்கர் மகள் கூறியது இதுதான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News