ஐபிஎல் 2022 லீக் போட்டிகள் கிட்டத்தட்ட முடிவும் தருவாய்க்கு வந்து விட்டன. இந்த ஆண்டு புதிய அணிகளாக இடம் பெற்ற லக்னோ மற்றும் குஜராத் அணி புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. மேலும் பிளே ஆப்பிற்கும் தகுதி பெற்றுள்ளன. அடுத்த இரண்டு இடங்களை பிடிக்க மற்ற அணிகள் போராடி வருகின்றன. சென்னை அணி 4வது இடத்தையாவது பிடிக்க போராடிய நிலையில் மும்பைக்கு எதிராக தோல்வியை சந்தித்து பிளே ஆப்பிள் இருந்து வெளியேறியது. மும்பை மற்றும் சென்னை அணிகள் மட்டுமே அதிகார்வப்பூர்வமாக இதுவரை வெளியேறி உள்ளது.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022க்குப் பிறகு இந்திய அணி விளையாடும் போட்டிகள்!
3 மற்றும் 4வது இடத்திற்கு 6 அணிகள் போட்டி போட்டு வருகின்றன. ராஜஸ்தான் அணி 12 போட்டிகளில் 7ல் வெற்றி பெற்று தற்போது 3வது இடத்தில் உள்ளது. இன்றைய ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ வெற்றி பெரும் பட்சத்தில் குஜராத் மற்றும் லக்னோ அணிகள் நேரடியாக குவாலிபர் 1ல் விளையாடும். மேலும் லக்னோ அணி ராஜஸ்தான் தோற்கடித்தால் அது ஆர்சிபி, பஞ்சாப், டெல்லி, ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு உதவி கரமாக இருக்கும். அதே ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் அது அவர்களுக்கு மட்டுமே உதவியாக இருக்கும்.
பஞ்சாப், டெல்லி, கொல்கத்தா ஆகிய அணிகள், 6 போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இதனால் மீதமுள்ள 7 லீக் போட்டிகளும் முக்கியமானதாக அமைந்துள்ளது. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இன்னும் மீதும் ஒரு போட்டி மட்டுமே உள்ள நிலையில், அவர்கள் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகள் தோற்றால் தான் பிளே ஆப்பிற்கு தகுதி பெற முடியும்.
மேலும் படிக்க | ஐபிஎல் மேட்ச் பிக்சிங் செய்ததாக மூன்று பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR