IPL2022: கடைசி நிமிட பரபரப்பு! தம்பியின் விக்கெட்டை வீழ்த்திய அண்ணன்!

IPL 2022-ன் இன்றைய போட்டியில் லுக்நோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Written by - RK Spark | Last Updated : Mar 29, 2022, 01:25 AM IST
  • குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • பரபரப்பான இறுதி போட்டியில் குஜராஜ் அணி வெற்றி.
  • மேன் ஆப் தி மேட் விருதை வென்றார் ஷமி.
IPL2022: கடைசி நிமிட பரபரப்பு! தம்பியின் விக்கெட்டை வீழ்த்திய அண்ணன்!  title=

IPL 2022-ன் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. குஜராத் அணிக்கு ஹர்திக் பாண்டியாவும், லக்னோ அணிக்கு ராகுலும் முதன் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்றனர்.  டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.  

 

லக்னோ அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது, கேப்டன் ராகுல் முதல் பந்திலேயே அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.  அதிகம் எதிர்பார்க்கப்பட்ட, டி காக்கும் 7 ரன்களில் வெளியேற லக்னோ ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  அதன் பின் வந்த லூயிஸ் மற்றும் பாண்டே சொற்ப ரன்களில் வெளியேற குஜராத்  29 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது.  பிறகு ஜோடி சேர்ந்த  ஹூடா மற்றும் படோனி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.  இருவரும் அரைசதம் அடிக்க அணியின் ஸ்கோர் ஓர் அளவிற்கு உயர்ந்தது.  கடைசியாக இறங்கிய க்ருனால் பாண்டியா அதிரடியாக ஆட இறுதியில் லக்னோ அணி 158 ரன்கள் அடித்தது. 

 

அடுத்து களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் ரன்கள் எதும் இன்றி அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார்.  விஜய் சங்கரும் 4 ரன்களில் வெளியேற குஜராத் அணியும் சிறிது தடுமாறியது.  மேத்யூ வேட்,  ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர் 30 ரன்கள் அடிக்க தேவையான ரன்களை விட்டுக்கொடுக்காமல் குஜராத் அணி ஆடியது.  கடைசியில் இறங்கிய தெவாடியா மற்றும் அபினவ் மனோகர் அதிரடியாக ஆடி ரன்களை சேர்ந்தனர்.  இறுதியில் கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 

மேலும் படிக்க | முதல் போட்டியில் தோற்றால் சென்னை சாம்பியன் ஆகாதா?!- உண்மை என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News