ஐபிஎல் 2022 போட்டிகள் மும்பையில் உள்ள நான்கு மைதானங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் மெகா இடத்தில் பல்வேறு வீரர்கள் தங்களது புதிய அணியில் இணைந்துள்ளார். மேலும் 2 புதிய அணிகள் இந்த வருட ஐபிஎல்-ல் பங்கேற்று உள்ளனர். மொத்தமாக 10 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | மாஸ் காட்டிய ஹைதராபாத்! தொடர்ந்து 4-வது வெற்றி!
வழக்கமாக ஐபிஎல் போட்டிகளில் மிகவும் பவர்ஃபுல் அணி என கருதப்படும் சென்னை மற்றும் மும்பை அணிகள் இந்த முறை புள்ளிப் பட்டியலில் கடைசி இரண்டு இடத்தில் உள்ளன. மும்பை அணி 5 முறையும், சென்னை அணி 4 முறையும் கோப்பையை வென்று இருந்த போதிலும், ஐபிஎல் 2022 போட்டியில் சென்னையில் 6-ல் 5 போட்டிகளிலும், மும்பை அணி 6-ல் 6 போட்டிகளிலும் தோல்விவை சந்தித்து உள்ளது. இரண்டு அணிகளிலும் இருந்த முக்கியமான வீரர்கள் தற்போது மற்ற அணிகளில் விளையாடி வருவது இரண்டு அணிகளுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஐபில் 2002 ஏலத்தில் இரண்டு அணிகளும் குறிப்பிட்ட சில வீரர்களுக்கு அதிகமாக பணத்தை செலவிட்டு மற்ற வீரர்களின் மேல் கவனம் செலுத்தாமல் இருந்தனர். இது இந்த இரண்டு அணிகளுக்கும் மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்நிலையில் ஐபிஎல் 2022 பிளே ஆப்பிள் சென்னை மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற சில வாய்ப்புகள் உள்ளது. மும்பை அணி மீதமுள்ள 8 போட்டிகளில் எட்டிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப்பிற்கு தகுதி பெற முடியும், சென்னை அணிக்கு மீதமுள்ள 8 போட்டிகளில் 7-ல் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.
கடந்த முறை கோப்பையை வென்ற சென்னை அணிக்கு இப்படி ஒரு நிலைமையா என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். மிகவும் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்ட மும்பை அணிக்கு பிளே ஆப் செல்லும் வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ளது. இந்த வருட ஐபிஎல்-ல் புதிதாக இணைந்த குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். வரும் ஏப்ரல் 21-ம் தேதி சென்னை மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன.
மேலும் படிக்க | மீண்டும் பவுலிங்கில் சொதப்பல்! சிஎஸ்கே-விற்கு எமனாக வந்த ரஷித் கான், மில்லர்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR