ஐ.பி.எல் 2021 புள்ளிகள் அட்டவணை: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யார் கையில்?

IPL 2021 Points Table: பரபரப்பான போட்டியில் சென்னையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 5, 2021, 02:00 PM IST
  • இரண்டு அணிகளும் ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.
  • பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் 528 ரன்கள் எடுத்துள்ளார்.
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் ஹர்ஷல் பட்டேல் 26 விக்கெட் எடுத்துள்ளார்.
ஐ.பி.எல் 2021 புள்ளிகள் அட்டவணை: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யார் கையில்?  title=

IPL 2021 Points Table: டெல்லி அணியின் பந்துவீச்சாளர்களின் சரியான செயல்பாட்டாலும், கடைசி ஓவரில் ஷிம்ரான் ஹெட்மேயரின் புத்திசாலித்தனமான பேட்டிங்கால் டெல்லி கேபிடல்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

137 என்ற இலக்கைத் துரத்திய டெல்லி அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 28 ரன்கள் தேவைப்பட்டது. சென்னை அணியின் பந்துவீச்சாளர் டுவைன் பிராவோ (Dwayne Bravo) வீசிய ஓவரில் 12 ரன்களும், ஜோஷ் ஹேசில்வுட்டில் (Josh Hazlewood) வீசிய ஓவரில் 10 ரன்களும் எடுத்தார் டெல்லி வீரர் ஹெட்மியர்.

அதனையடுத்து கடைசி ஓவரில் டெல்லி அணிக்கு ஆறு ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரில் அக்ஸர் பட்டேலின் விக்கெட்டை இழந்த போதிலும், இரண்டு பந்துகள் மீதமுள்ள நிலையில் டெல்லி அணி வெற்றி பெற்றது. ஹெட்மியர் 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். முன்னதாக, டெல்லி பந்து வீச்சாளர்கள் சென்னை அணியை 136 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர்.

DC vs CSK ஆட்டம் நிலவரம்:
137 என்ற எளிய இலக்கை துரத்திய டெல்லி அணி 19 பந்துகளில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷிகர் தவான் 35 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

ALSO READ | ஒரு கேட்சில் மாறிய மேட்ச்! 3 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி!

ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும், தீபக் சாஹர், டுவைன் பிராவோ மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முன்னதாக, பேட்டிங் செய்ய அழைக்கப்பட்ட சிஎஸ்கே 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது. சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாக அம்பாடி ராயுடு 43 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ராபின் உத்தப்பா 19 ரன்கள் சேர்த்தார்.

சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் 18 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளையும், அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வின் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி:
சிஎஸ்கே மற்றும் டிசி இரண்டு அணிகளும் ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ஆரஞ்சு தொப்பி:
பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணியின் கேப்டன் கேஎல் ராகுல் 528 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை தன் வசம் வைத்துள்ளார்

ALSO READ | சதமடித்து சாதனை செய்தார் MS Dhoni: IPL-ல் தல தோனிக்கு புதிய ரெகார்ட்

ஊதா தொப்பி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bangalore) அணியை சேர்ந்த ஹர்ஷல் பட்டேல் 26 விக்கெட் எடுத்து ஊதா தொப்பி கைப்பற்றி உள்ளார்.

ஐபிஎல் 2021 புள்ளிகள் அட்டவணை (IPL Points Table 2021)

வ.எண் அணி ஆட்டம் வெற்றி தோல்வி புள்ளிகள் ரன்-ரேட்
1 டெல்லி கேப்பிடல்ஸ் 13 10 3 20 +0.551
2 சென்னை சூப்பர் கிங்ஸ் 13 9 4 18 +0.551
3 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 12 8 4 16 -0.157
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13 6 7 12 +0.294
5 பஞ்சாப் கிங்க்ஸ் 13 5 8 10 -0.337
6 ராஜஸ்தான் ராயல்ஸ் 12 5 7 10 -0.337
7 மும்பை இந்தியன்ஸ்  12 5 7 10 -0.453
8 சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 12 2 10 4 -0.475

ALSO READ | IPL அலப்பறை: கமெண்டில் மகனுக்கு பெண் கேட்ட Bravo, கனவை கலைத்த Pollard

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News