IPL 2021-ல் நுழைந்தது கொரோனா: இன்றைய KKR vs RCB போட்டி ஒத்திவைப்பு!!

இரண்டு KKR வீர்ரகளுக்கு கோவிட் தொற்று உறுதியானதால் இன்றைய KKR vs RCB போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2021, 01:49 PM IST
  • IPL 2021-ல் இன்றைய KKR vs RCB போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
  • KKR அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • BCCI இது குறித்த அறிக்கையை வெளியிட்டது.
IPL 2021-ல் நுழைந்தது கொரோனா: இன்றைய KKR vs RCB போட்டி ஒத்திவைப்பு!!  title=

IPL 2021: IPL 2021-ல் இன்று நடக்கப்படவிருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு இடையிலான போட்டி ஒத்திவைகப்பட்டுள்ளது. இரண்டு KKR வீர்ரகளுக்கு கோவிட் தொற்று உறுதியானதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

KKR அணியின் வருண் சக்ரவர்த்தி மற்றும் சந்தீப் ஆகிய இரு வீரர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

இதனால், இன்றைய போட்டி குறித்த கேள்விகள் எழும்பிய நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான BCCI, இது குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

இரு வீரர்களுக்கு தொற்று உறுதியானதால், இன்றைய ஆட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக BCCI கூறியுள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) இடையிலான IPL ஆட்டம் இன்று, மே 3 திங்களன்று,  அகமதாபாத்தில் நடைபெற திட்டமிடப்பட்டது. புள்ளிகள் அட்டவணையில் கே.கே.ஆர் நான்கு புள்ளிகளுடன் ஏழாவது இடத்திலும், ஆர்.சி.பி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இந்த போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் மாலை 7:30 மணிக்கு நடக்கவிருந்தது. 

ALSO READ: Covid 19க்கு எதிரான போரில் இந்தியாவுக்கு உதவ Cricket Australia இத்தனை கோடி ரூபாய் நன்கொடை!

கே.கே.ஆர் மற்றும் ஆர்.சி.பி இரு அணிகளும் அவர்களது முந்தைய போட்டிகளில் தோல்வியை எதிர்கொண்டனர். கொல்கத்தா அணி டெல்லி அணிக்கு எதிராக ஆடி தோல்வியுற்றது. பெங்களூரு அணி பஞ்சாப் அணியிடம் தோற்றது. 

IPL 2021-ல் இதுவரை, KKR சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வந்துள்ளது. IPL 2020-ல் 14 போட்டிகளில் KKR 7 போட்டிகளில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா அணியில் இரு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், இன்று நடக்க இருந்த கொல்கத்தா - பெங்களூரு இடையேயான போட்டி ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ALSO READ: Shocking: அலைகழிக்கும் BCCI, கோவிட் சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் கிரிக்கெட் வீரர்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News