அபுதாபி: ஐபிஎல் 2020 எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதிராராபாத் அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் பந்துவீட முடிவெடுத்தார்.
முதலில் மட்டை வீச களம் இறங்கிய பெங்களூரு அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை எடுத்தது. ஏபிடி வில்லியர்ஸ் 56 ரன்கள் அடித்தார். இதுதான் பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
— SunRisers Hyderabad (@SunRisers) November 6, 2020
அடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணி, 19.4 ஓவர்களில், அதாவது இரண்டு பந்துகள் மீதமிருந்த நிலையில் 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது.
நவம்பர் 8ஆம் தேதி, அதாவது நாளை மறுநாள் நடைபெறும் தகுதிப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் ஹைதராபாத் அணி மோதும்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் தோற்றதன் மூலம் ஐபிஎல் 2020 தொடரிலிருந்து பெங்களூரு அணி வெளியேறிவிட்டது.
ஹைதராபாத் அணியில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். டேவிட் வார்னர் 17 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்துவந்த மனிஷ் பாண்டே 24 ரன்களுடன் பெவிலியனுக்குத் திரும்பினார். ஆட்டமிழந்தார்.
அதிரடியாக ஆடிய கேன் வில்லியம்சன் 44 பந்துகளில் அரை சதம் அடித்தார். கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 2 பவுண்டரிகளை எடுத்து அணியை குவாலிஃபையர் சுற்றுக்கு கொண்டு சேர்த்தார்.ஆட்ட நாயகனாக கேன் வில்லியம்சன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 19.4 ஓவர் முடிவில் வெற்றி இலக்கான 132 ரன்களை இழந்த ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR