ஆண்டுதோறும் கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் IPL 2020 கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு UAE-ல் நடக்கவுள்ளது. இடம் தான் மாறியுள்ளதே தவிர ரசிகர்களின் ஆர்வமும் எதிர்பார்பார்ப்பும் துளியும் மாறவில்லை.
செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்கஸ் (CSK) மும்பை இந்தியன்சுடன் (MI) தொடக்க ஆட்டத்தில் விளையாடவிருகிறது. இவ்வாண்டிற்கான IPL அட்டவணைகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அட்டவணை அறிவிக்கப்பட்டால், அதற்கேற்ற படி அணிகள் தங்களை தயார் படுத்திக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
CSK பல சவால்களோடும் பல எதிர்பாரா திருப்பங்களோடும் இந்த போட்டிகளுக்குள் நுழைகிறது. ‘டேடீஸ் டீம்’ என கிண்டல் செய்யப்பட்ட CSK அணியின் வீரர்களின் சராசரி வயது 33.4 ஆகும். எனினும், தாங்கள் ஆடிய விதத்தில் வயதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என CSK தங்களை கிண்டல் செய்த அனைவருக்கும் புரிய வைத்தது. மும்பை அணியிடம் இறுதி ஆட்டத்தில் தோற்றாலும், அந்த அணிக்கு CSK ஒரு கடுமையான சவாலை அளித்து என்பதை யாராலும் மறுக்க முடியாது.
CSK செப்டம்பர் 19 அன்று நடக்கவிருக்கும் துவக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதும். இதைத் தொடர்ந்து செப்டம்பர் 22 அன்று ராஜஸ்தான் ராயல் அணியுடன் மோதவுள்ளது. CSK –வின் லீக் போட்டிகளின் கடைசி போட்டி கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணியுடன் நவம்பர் 1 ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
2010, 2011 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை CSK IPL பட்டத்தை வென்றுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தரையிறங்கிய பின்னர் CSK அணியில் பலருக்கு கோவிட் -19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவற்றிற்கான அனைத்து நடனடிக்கைகளும் முடிந்து வெள்ளிக்கிழமைதான் CSK தனது நெட் ப்ராக்டிசை துவங்கியது.
எனினும் இவை அனைத்தையும் மறந்து, இனி CSK அணி ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மற்ற அணிகளைப் போலவே, ரசிகர்களின் ஆதரவை CSK அணியும் கண்டிப்பாக மிஸ் செய்யும். அதுவும் அவர்களுக்கு எப்போதும் உருதுணையாக இருந்து ஆதரவளிக்கும் Yellow army இந்த முறை மைதானத்தில் காணப்பட மாட்டார்கள். இருப்பினும் சமூக ஊடகங்களில் அவர்களது ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் அணிக்கு ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.
ALSO READ: IPL 2020: தோனியின் அதிரடி Net practice-ன் Video!! மகிழ்ச்சியில் திளைக்கும் ரசிகர்கள்!!
CSK-வின் IPL 2020 அட்டவணை பின்வருமாறு:
September 19, 2020: Mumbai Indians vs Chennai Super Kings, 7:30 PM IST (Sheikh Zayed Stadium, Abu Dhabi)
September 22, 2020: Rajasthan Royals vs Chennai Super Kings, 7:30 PM IST (Sharjah Cricket Stadium, Sharjah)
September 25, 2020: Chennai Super Kings vs Delhi Capitals, 7:30 PM IST (Dubai International Cricket Stadium , Dubai)
October 2, 2020: Chennai Super Kings vs Sunrisers Hyderabad, 7:30 PM IST (Dubai)
October 4, 2020: Kings XI Punjab vs Chennai Super Kings, 7:30 PM IST (Dubai)
October 7, 2020: Kolkata Knight Riders vs Chennai Super Kings, 7:30 PM IST (Abu Dhabi)
October 10, 2020: Chennai Super Kings vs Royal Challengers Bangalore, 7:30 PM IST (Dubai)
October 13, 2020: Sunrisers Hyderabad vs Chennai Super Kings, 7:30 PM IST (Dubai)
October 17, 2020: Delhi Capitals vs Chennai Super Kings, 7:30 PM IST (Sharjah)
October 19, 2020: Chennai Super Kings vs Rajasthan Royals, 7:30 PM IST (Abu Dhabi)
October 23, 2020: Chennai Super Kings vs Mumbai Indians, 7:30 PM IST (Sharjah)
October 25, 2020: Royal Challengers Bangalore vs Chennai Super Kings, 3:30 PM IST (Dubai)
October 29, 2020: Chennai Super Kings vs Kolkata Knight Riders, 7:30 PM IST (Dubai)
November 1, 2020: Chennai Super Kings vs Kings XI Punjab, 3:30 PM IST (Abu Dhabi)
CSK அணி வீரர்களின் பட்டியல்:
எம்.எஸ். தோனி (கேப்டன்), நாராயண் ஜகதீசன், ருதுராஜ் கைவாட், கெ.எம். ஆசிஃப், ரவீந்திர ஜடேஜா, எம். விஜய், ஜோஷ் ஹேஸல்வுட், ககேதார் ஜாதவ், ஹர்பனஜ் சிங், கரன் ஷர்மா, பியுஷ் சாவ்லா, அம்பத்தி ராயுடு, சுரேஷ் ரய்னா, இம்ரான் தாஹிர், தீபக் சஹர், ஃபாஃப் ட்யுப்ளெசிஸ், ஷார்துல் தாகுர், மிட்செல் சேன்டர், ட்வெயின் ப்ராவோ, லங்கி நிகிடி, சேம் குர்ரன், மோனு குமார், ஷேன் வாட்சன், சாய் கிஷோர்.
ALSO READ: முழுமையாக தயார் நிலையில் IPL 2020 போட்டிக்கான ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம்....