IPL 2020: ஹர்பஜன் சிங்-க்கு பதிலாக இந்த 4 வீரர்களின் பெயர்கள் CSK அணிக்கு பரிந்துரை

ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக இந்த நான்கு வீரர்களில் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட வைக்கலாம் என தனது யூடியூப் சேனலில் 4 சாத்தியமான வீரர்களின் பெயர்களை ஆகாஷ் சோப்ரா பட்டியலிட்டுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 8, 2020, 06:08 PM IST
IPL 2020: ஹர்பஜன் சிங்-க்கு பதிலாக இந்த 4 வீரர்களின் பெயர்கள் CSK அணிக்கு பரிந்துரை title=

ஐ‌பி‌எல் கிரிக்கெட் நியூஸ்: இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவமிக்க ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் (Harbhajan Singh), வரவிருக்கும் ஐபிஎல்லின் 13 வது சீசனில் இருந்து தனது பெயரை வாபஸ் பெற்றுள்ளார். ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஹர்பஜன் விளையாட திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் தனிப்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்டி தொடரில் இருந்து விலக முடிவு செய்தார். ஐபிஎல் 2020 (IPL 2020) ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் தொடங்கும். ஹர்பஜன் போட்டிகளில் இருந்து வெளியேறுவது சென்னைக்கு ஒரு பெரிய பின்னடைவு. 

இப்போது சென்னைக்கு சுழல் துறையில் இம்ரான் தாஹிர், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர் மற்றும் பியூஷ் சாவ்லா போன்ற வீரர்களுடன் சேர்ந்து புதிய ஒருவரை விளையாட வைக்கலாம். இருப்பினும், முன்னாள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra), ஹர்பஜன் சிங்குக்கு பதிலாக இந்த நான்கு வீரர்களில் ஒருவரை சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணிக்காக விளையாட வைக்கலாம் என தனது யூடியூப் சேனலில் 4 சாத்தியமான வீரர்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். 

ALSO READ | 

இந்த பட்டியலில் முதல் பெயர் மேற்கிந்திய தீவுகளின் ரோஸ்டன் சேஸ் (Roston Chase). சேஸ் தற்போது சிபிஎல் 2020 (CPL 2020) இல் செயின்ட் லூசியா ஜாக்ஸிற்காக விளையாடுகிறார். 

இரண்டாவது பெயர் ஆஸ்திரேலியாவின் நாதன் லியோன் (Nathan Lyon), மூன்றாவது பெயர் பங்களாதேஷைச் சேர்ந்த மெஹ்தி ஹசன் மீராஜ் (Mehdi Hasan Miraj). இதன் பின்னர், நான்காவது பெயர் இந்திய ஆல்ரவுண்டர் ஜலஜ் சக்சேனா (Jalaj Saxena), இவர் தனது முதல் ஐபிஎல் விளையாட காத்திருக்கிறார்.

Trending News