புதிய தகவல்.. ஐ.பி.எல் 11_வது சீசனில் டி.ஆர்.எஸ். முறை!!

ஐ.பி.எல் 11_வது சீசன் கிரிக்கெட் தொடரில் டி.ஆர்.எஸ். முறை பின்பற்ற பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

Last Updated : Feb 28, 2018, 02:31 PM IST
புதிய தகவல்.. ஐ.பி.எல் 11_வது சீசனில் டி.ஆர்.எஸ். முறை!! title=

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு கடந்த 10 வருடமாக நடந்து வருகிறது. கிரிக்கெட் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள ஐ.பி.எல் தொடரின் 11_வது சீசன் ஏப்ரல் மாதம் 7-ம் தேதி தொடங்கி மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் தேர்வு நடந்து முடிந்துள்ளது. 

சூதாட்ட புகார் காரணமாக கடந்த இரண்டு சீசனில் விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களமிறங்குகின்றன. தமிழக வீரர் அஸ்வினை தக்கவைத்துக்கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முயற்ச்சி செய்தும், அவரை தக்க வைக்க முடியவில்லை. ரூ 7.6 கோடி விலை கொடுத்துக் அஸ்வினை நடிகை பிரித்தி ஜிந்தா சக உரிமையாளராக உள்ள பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. மேலும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தமிழக வீரர் அஸ்வினை கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

பதினோறாவது ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

இந்நிலையில், இதுவரை டி.ஆர்.எஸ் முறை ஐ.பி.எல் தொடரில் பின்பற்றவில்லை. ஆனால் ஐபிஎல் 11_வது சீசனில் டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்த இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பிசிசிஐ கிரீன் சிக்னல் காட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி டி.ஆர்.எஸ் முறை அறிமுகப்படுத்தட்டால் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு சிறப்பாக அமையும்.

தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் டி.ஆர்.எஸ் முறை பின்பற்றப் படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடும் போட்டி அட்டவணை:-

 

Trending News