ஐபிஎல் 2017: டெல்லி அணி 168 ரன்கள்!!

Last Updated : Apr 17, 2017, 05:52 PM IST
ஐபிஎல் 2017: டெல்லி அணி 168 ரன்கள்!! title=

10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன. 

ஐபிஎல் போட்டியில் மும்பை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 168 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் டி20 சீசன் 10 போட்டியில் இன்று டெல்லி டேர்டெவில்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற டெல்லி டேர்டெவில்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்களை குவித்தது. இதனையடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 169 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trending News