ஐபிஎல் 2017: டெல்லியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இன்று மோதல்!

Last Updated : Apr 19, 2017, 02:27 PM IST
ஐபிஎல் 2017: டெல்லியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் இன்று மோதல்! title=

ஐபிஎல் போட்டியின் 21-வது ‘லீக்’ ஆட்டம் ஐதராபாத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. 

இதில் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- ஜாகீர்கான் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. 

டெல்லி டேர்டெவில்ஸ் 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. 

6 புள்ளிகளுடன் பட்டியலில் ஹைதரா பாத் அணி 3-வது இடத்திலும், டெல்லி அணி 4 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும் உள்ளன. 

இதுவரை இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 5 போட்டியிலும், டெல்லி 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

 

Trending News