INDvsAUS: பாக்சிங் டே டெஸ்ட், 2ம் நாள்: 443 ரன்னுக்கு டிக்ளர் செய்த இந்திய அணி

பாக்சிங் டே டெஸ்ட்டில் இந்திய அணி இரண்டாவது நாளாக தொடர்ந்து விளையாடி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 27, 2018, 12:46 PM IST
INDvsAUS: பாக்சிங் டே டெஸ்ட், 2ம் நாள்: 443 ரன்னுக்கு டிக்ளர் செய்த இந்திய அணி title=

11:58 27-12-2018
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாவது நாளாக தொடர்ந்து ஆடிய இந்திய அணி புஜாராவின் சதத்தாலும், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் அரை சதத்தாலும், இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்துள்ளது. 

இதனையடுத்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி டிக்ளர் அறிவித்துள்ளார். இந்தநிலையில் இன்னும் சற்று நேரத்தில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை விளையாட உள்ளது.

 

 


 

 


11:52 27-12-2018
ஆறாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. ரிஷாப் பன்ந் 39(76) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது நிலவரப்படி இந்திய அணி 169 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்புக்கு 438 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மாவுடன் ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளார்.

 

 


11:34 27-12-2018
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 166 ஓவர் முடிவில் 415 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா* 52(104) மற்றும் ரிஷாப் பன்ந் *26(67) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.


10:52 27-12-2018
தற்போதைய நிலவரப்படி இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா* 38(79) மற்றும் ரிஷாப் பன்ந் *9(32) ஆடி வருகின்றனர்.

 

 


10:27 27-12-2018
ஐந்தாவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. ரஹானே 34(76) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது நிலவரப்படி இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் ஷர்மா* 13(52) மற்றும் ரிஷாப் பன்ந் *0(0) ஆடி வருகின்றனர்.

 


09:45 27-12-2018
தேநீர் இடைவேளை வரை இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 346 ரன்கள் எடுத்துள்ளது. அஜிங்கியா ரஹானே* 30(57), ரோஹித் ஷர்மா* 13(52) ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

 

 


08:40 27-12-2018
நான்காவது விக்கெட்டை இழந்த இந்திய அணி. நன்றாக ஆடிவந்த பூஜார 106(319) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது நிலவரப்படி இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.

 

 


08:13 27-12-2018

விராட் கோலி  82(204) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். தற்போது நிலவரப்படி இந்திய அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா மற்றும் அஜிங்கியா ரஹானே ஆடி வருகின்றனர்.

 


ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து தற்போது டெஸ்ட் தொடர் நடைப்பெற்று வருகின்றது. 

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரில் இருஅணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை பெற்றுள்ளது.

இந்தநிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் எனப்படும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று (டிசம்பர் 26) மெல்பர்ன் மைதானத்தில் அதிகாலை துவங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. மயங்க் அகர்வால், ஹனுமா விஹாரி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்திய அணியின் ஸ்கோர் 40 ரன்கள் எடுத்திருந்த போது, ஹனுமா விஹாரி 8(66) ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த சேதுஷ்வர் புஜாரா மற்றும் மயங்க் அகர்வால் இணைந்து ஆடினர். ஒரு கட்டத்தில் நன்றாக ஆடி வந்த மயங்க் அகர்வால் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். இதன்மூலம் சர்வேதே டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை அடித்தார். மயங்க் அகர்வால் 76(161) ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

பின்னர் சேதுஷ்வர் புஜாரா மற்றும் இந்திய கேப்டன் விராட் கோலி இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். மூன்றாவது டெஸ்ட்டின் முதல் நாளில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்தது. சேதுஷ்வர் புஜாரா* 68(200) மற்றும் விராட் கோலி* 47(107) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி உணவு இடைவேளை வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. இதில் புஜாரா தனது 17 வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார். மறுபுறத்தில் விராட் கோலி அரை சதத்தை பூர்த்தி செய்துள்ளார். இது இவரின் 20 வது அரை சதமாகும். 

தற்போது நிலவப்படி இந்திய அணி உணவு இடைவேளை வரை இரண்டு விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. அதில் புஜாரா* 103(294) ரன்களும், விராட் கோலி* 69(182) ரன்களும் எடுத்துள்ளனர்.

Trending News