இங்கிலாந்து பதிலடி!! இந்தியா கடைசி போட்டியில் தோல்வி.. தொடரை இழந்தது

கடைசி ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரை வென்றது இங்கிலாந்து அணி

Written by - Shiva Murugesan | Last Updated : Jul 18, 2018, 12:23 AM IST
இங்கிலாந்து பதிலடி!! இந்தியா கடைசி போட்டியில் தோல்வி.. தொடரை இழந்தது title=

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. இத்தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் இன்று ஹெட்டிங்கெலி மைதானத்தில் நடைப்பெற்று.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இதனையடுத்து இன்று மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறுவோர் ஒருநாள் தொடரை கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்புகிடையே டாஸ் போடப்பட்டது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

எனவே முதலில் பேட்டிங் தொடங்கிய இந்திய அணி ஆறாவது ஓவரில் 2 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் கேட்ச் அவுட் ஆனார். ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த இந்திய கேப்டன் விராத் கோலி இணைந்து நன்றாக விளையாடினார்கள். எதிர்பாரதவிதமாக 44 ரன்கள் எடுத்திருந்த போது ஷிகர் தவான் ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 21 எடுத்து ஃபோல்ட் ஆனார். நன்றாக விளையாடிக் கொண்டிருந்த விரத் கோலி 71 ரன்களில் ஃபோல்ட் ஆனார். அடுத்த வந்த சுரேஷ் ரெய்னா 1 ஏன் மட்டும் எடுத்து அவுட் ஆனார். 31 ஓவருக்கு இந்தியா ஐந்து விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. நிதானமாக விளையாடிய தோனி அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கபட்ட நிலையில், 42 ரன்களுக்கு அவுட் ஆனார். கடைசியாக இந்திய அணி ஐம்பது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அடில் ரஷீத் மற்றும் டேவிட் வில்லி தலா மூன்று விக்கெட் எடுத்தனர்.

இதனையடுத்து 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கவுள்ளது. ஆரம்ப முதலே அதிரடி காட்டிய ஜானி பேர்ஸ்டோவ் 13 பந்துகளில் 30 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரர் ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன்-அவுட் ஆனார். பின்னர் ஜோ ரூட் மற்றும் இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் இணைந்து நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். இவர்கள் முன்பு இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இருவரும் அரைசதம் அடுத்து அசத்தினர். பின்னர் நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 100 ரன்களும், இயோன் மோர்கன் 88 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியசத்தில் வெற்றி பெற்றது. இந்திய சார்பில் ஷர்டுல் தாகூர் மற்றும் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இந்த வெற்றி மூலம் ஒரு நாள் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. முன்னதாக நடைபெற்ற டி-20 தொடரை இந்தியா வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News