2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலக கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில், அதற்கான தலைவிதி மும்பை வான்கடேவில் தான் மீண்டும் எழுதப்பட இருக்கிறது. தோனி கேப்டனாக இருக்கும்போது மும்பை வான்கடே மைதானத்தில் தான் இந்திய அணி இலங்கை அணியை வீழ்த்தி உலக கோப்பையை வென்றது. இம்முறை உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றாலும் மும்பையில் வான்கடேவில் நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியை இந்திய அணி கட்டாயம் வெல்ல வேண்டும். லீக் சுற்றுகளில் 9 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தினால் மட்டுமே உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு செல்ல முடியும்.
மேலும் படிக்க | 400 ரன்களை குவித்த இந்தியா - ராகுல், ஸ்ரேயாஸ் சதம் ... நெதர்லாந்து பவுலரும் சதம்..!
நியூசிலாந்து அணியை எந்தவிதத்திலும் குறைத்து மதிப்பிட முடியாது. 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தி தான் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதில் ஏற்பட்ட காயம் பாடத்தை இந்திய அணியில் இருக்கும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மறந்திருக்க வாய்ப்பில்லை. அந்த தோல்வி குறித்து விராட் கோலி பேசும்போது, 45 நிமிட மோசமான கிரிக்கெட் ஆட்டம் எங்களின் உலக கோப்பை கனவை பறித்துவிட்டது என கூறியிருந்தார். ஏனென்றால் அந்த உலக கோப்பையிலும் இந்திய அணி அரையிறுதிப் போட்டி வரை தோல்வியை சந்திக்கவில்லை.
ஐசிசி தொடர்களைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு மிகவும் சிம்ம சொப்பமனாக இருப்பது நியூசிலாந்து அணி மட்டுமே. இதுவரை 10 ஐசிசி போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்ததில் இந்திய அணி முறை மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. அத்துடன் இந்திய அணியை 4 முறை நாக் அவுட் சுற்றுகளில் நியூசிலாந்து அணி வெளியேற்றியிருக்கிறது. ஐசிசி தொடர்களில் 2003 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியூசிலாந்து அணியை தோற்கடிக்கவில்லை என்பதை நடப்பு உலக கோப்பையில் தான் இந்திய அணி அந்த அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி பெற்று முடிவுக்கு கொண்டு வந்தது.
அதேபோன்றதொரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே இந்திய அணி நியூசிலாந்து அணியை அரையிறுதிப் போட்டியில் வீழ்த்த முடியும். அதற்கு இந்திய அணி பிரத்யேகமாக வியூகம் ஒன்றை வகுத்துள்ளனர். நியூசிலாந்து அணியில் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் ரச்சின் ரவீந்திரா மற்றும் பிலிப்ஸ் ஆகியோரை கட்டுப்படுத்த ரோகித் படை திட்டம் தீட்டியுள்ளது. இந்த பிளான் வெற்றி பெற்றால் இந்திய அணியின் வெற்றியும் சாத்தியமே.
மேலும் படிக்க | உலககோப்பை அரையிறுதிப் போட்டி: நீங்கள் கேள்விப்படாத 8 சுவாரஸ்யங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ