நம்பர் 1 இடம் இந்தியாவுக்கு எப்போதும் பிரச்சனை தான் - இந்த முறையாவது சோக வரலாறு மாறுமா?

உலக கோப்பை போட்டியில் லீக் தொடரின் முடிவில் இரண்டு முறை நம்பர் ஒன் இடத்தில் இந்தியா இருந்து வெளியேறியிருக்கும் நிலையில், இம்முறை அந்த சோக கதை மாற்றி எழுதப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Nov 9, 2023, 07:50 AM IST
  • நம்பர் 1 இடத்தில் இந்திய அணி
  • இரண்டு முறை இதேபோல் இருந்தது
  • இம்முறை அரையிறுதியில் வெற்றி பெறுமா?
நம்பர் 1 இடம் இந்தியாவுக்கு எப்போதும் பிரச்சனை தான் - இந்த முறையாவது சோக வரலாறு மாறுமா? title=

இந்திய அணி உலக கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் கம்பீரமாக இருக்கிறது. அத்துடன் அரையிறுதி வாய்ப்பையும் உறுதி செய்த முதல் அணி இந்தியா தான். இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு உலக கோப்பைகளிலும் இந்திய அணி இதேபோல் லீக் சுற்றுகளின் முடிவில் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை தொடர்களில் அபாரமாக விளையாடிய இந்திய அணி லீக் சுற்றுகளின் முடிவில் முதல் இடத்தை பிடித்ததை. அதனால் இந்த உலக கோப்பைகளை இந்திய அணி தான் வெல்லும் என எல்லோரும் நினைத்தனர். ஏனென்றால் வெல்ல முடியாத அணியாக இந்திய அணியின் ஆட்டம் இருந்தது. ஆனால், இந்த இரண்டு உலக கோப்பை தொடர்களிலும் இந்திய அணி அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியது.

மேலும் படிக்க | தோல்வியே இல்லாமல் உலகக் கோப்பையை தூக்கிய 2 அணிகள்... இந்தியாவும் லிஸ்டில் சேருமா?

2015 ஆம் ஆண்டு தான் அரையிறுதிப் போட்டியில் தோற்றது என்றால், 2019 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியிலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அரையிறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. அப்போட்டி மழை காரணமாக இரண்டாவது நாளில் தொடர்ந்தது. முதல் நாளில் இந்தியஅணி தொடர்ந்து விளையாடி இருந்தால் வெற்றி பெற்றிருக்கும் வாய்ப்பு பிரகாசமாக இருந்தது.

மழைக்குப் பிறகு அதே மைதானத்தில் நடைபெற்ற போட்டியால் இந்திய அணி மையிரிலையில் தோல்வியை தழுவ நேரிட்டது. இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக இருக்கும் எம்எஸ் தோனி இந்திய அணிக்காக விளையாடிய கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டியாகவும் அப்போட்டி மாறியது. மார்டின் கப்தில் எதிர்பாராதமல் அடித்த த்ரோவால் தோனி ரன் அவுட்டானார். 

அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் வெற்றி நம்பிக்கையும் தகர்ந்தது. அதன்பிறகு இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியிலும் இந்திய அணி தோல்வி என்ற வாடையே இல்லாமல் கம்பீரமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. இம்முறையும் அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அல்லது நியூசிலாந்து அணிகளை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிக வாய்ப்பு நியூசிலாந்து அணிக்கே இப்போதைய சூழலில் இருப்பதால், கடந்த முறை செய்த தவறுகளை செய்யாமலும், 2019 ஆம் ஆண்டு தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இந்திய அணியின் ஆட்டம் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இந்த எதிர்பார்ப்பு ஈடேறுமா? என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும். 

மேலும் படிக்க | பாகிஸ்தானை பயமுறுத்தும் இங்கிலாந்தின் வெற்றி... சாம்பியன் டிராபியை நோக்கி நடப்பு சாம்பியன்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News