இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் 109 ரன்களுக்கு சுருண்ட இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 197 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தது. 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியதும் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவின் பந்துவீச்சில் எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் இழந்தது ஆஸ்திரேலியா. இதனைத் தொடர்ந்து இந்திய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டபோது, முன்னணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.
மேலும் படிக்க | IND vs AUS: இந்தியா படுதோல்வி... உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறிய ஆஸி.,
சுப்மன் கில் இறங்கி வந்து அடிக்க முற்பட, பந்து ஸ்டம்பை பதம்பார்த்தது. கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி முறையே எல்பிடபள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தனர். புஜாரா மட்டும் ஒருமுனையில் நம்பிக்கை கொடுக்கும் விதமாக விளையாடினார். 59 ரன்கள் எடுத்த அவர், 8வது விக்கெட்டாக அவுட்டாகி வெளியேறினார். ஸ்ரேயாஸ் அய்யர் 26 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் அனைவரும் 20 ரன்களுக்கு குறைவாகவே எடுத்து பெவிலியன் திரும்பினர். இதன் மூலம் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 163 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது. சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லையன் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து இந்திய அணி 75 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு இலக்காக நிர்ணயித்திருக்கிறது. நாளை நடைபெற இருக்கும் 3வது நாள் ஆட்டத்தில் இந்த வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களம் காண இருக்கிறது. இப்போட்டியில் வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றிக்கலாம். ஆனால், இப்போது அந்த வாய்ப்பு மிக மிக குறைவாகவே இருக்கிறது. ஏதாவதொரு மாயாஜாலம் நடந்தால் மட்டுமே இந்திய அணியால் 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற முடியும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ