தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Last Updated : Sep 24, 2019, 07:22 PM IST
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து பும்ராவுக்கு ஓய்வு! title=

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக வரவிருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்த செய்தியை உறுதிப்படுத்திய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) வழக்கமான கதிரியக்க பரிசோதனையின் போது பும்ராவின் காயம் கண்டறியப்பட்டது என்றும், இப்போது அவர் கர்நாடகாவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) மறுவாழ்வு பெறுவார் என்றும் தெரிவித்துள்ளது.

"டீம் இந்தியா வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனது முதுகில் ஏற்பட்ட ஒரு சிறிய எலும்பு முறிவு காரணமாக, தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான Paytm Freedom Series for Gandhi-Mandela Trophy தொடரிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். வழக்கமான கதிரியக்கத் திரையிடலின் போது காயம் கண்டறியப்பட்டது. என்.சி.ஏவில் மறுவாழ்வு பெறவும், பி.சி.சி.ஐ மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்" என்று பி.சி.சி.ஐ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதன் விளைவாக, Paytm Freedom Series for Gandhi-Mandela Trophy தொடரில், பும்ராவுக்கு மாற்றாக உமேஷ் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

"அகில இந்திய மூத்த தேர்வுக் குழு திரு. உமேஷ் யாதவை பும்ராவின் மாற்றாக பெயரிட்டுள்ளது" என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெற்றிகரமான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் போது இந்திய அணிக்காக கடைசியாக விளையாடியா பும்ரா, முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரில் ஓய்வு பெற்றார்.

மறுபுறம், யாதவ், 2018 டிசம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது தேசிய அணிக்காக தனது கடைசி போட்டியில் தோன்றினார்.

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அக்டோபர் 2 முதல் விசாகப்பட்டினத்தில் உள்ள ACA-VDCA கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

புதுப்பிக்கப்பட்ட இந்திய டெஸ்ட் அணி பின்வருமாறு:

விராட் கோலி (கேப்டன்), மாயங்க் அகர்வால், ரோஹித் ஷர்மா, சட்டேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே (துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜாடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மான் கில்.

Trending News