Rishabh Pant Accident CCTV Video : தூக்கத்தில் ஓட்டிய ரிஷப் பண்ட்... தூக்கி வீசப்பட்ட கார்

Rishabh Pant Accident : இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

Written by - Sudharsan G | Last Updated : Dec 30, 2022, 11:28 AM IST
  • அவர் மெர்சிடிஸ் பென்ஸ் கார் முழுவதும் எரிந்து சேதம்.
  • ரிஷப் பண்ட் பலத்த காயத்துடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
Rishabh Pant Accident CCTV Video : தூக்கத்தில் ஓட்டிய ரிஷப் பண்ட்... தூக்கி வீசப்பட்ட கார்  title=

இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் இன்று (டிச. 30) காலை உத்தரகாண்டில் இருந்து டெல்லி நோக்கி தனது மெர்சிடிஸ் பென்ஸ் காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரின் கார் ஹரிதுவார் ரூர்க்கி நகருக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலை டிவைடரில் பலமாக மோதியுள்ளது. 

பலமாக மோதியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக ரிஷப் பண்டை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுமதித்தனர். விபத்தாகிய கார் தீப்பிடித்து எரிந்ததில் அது மொத்தமாக சேதமடைந்தது. ரிஷப் பண்டிற்கு உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதிசெய்ய அதிகாரிகளுக்கு உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | விரைவில் இந்திய அணிக்கு டாட்டா காட்டும் டிராவிட்... அடுத்தது யார்?

காரை ரிஷப் பண்ட் தான் ஓட்டிச்சென்றுள்ளார். மேலும், காரில் வேறு யாரும் அவருடன் பயணிக்கவில்லை. கார் விபத்துக்குள்ளான உடன் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததை அடுத்து, கார் கண்ணாடியை உடைத்து வெளியே தப்பித்துள்ளார். அதன்பின்னரே கார் முழுவதுமாக எரிந்துள்ளது. விபத்தின் சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளது. 

இந்த விபத்தில் அவருக்கு தலை, முழங்கால் மற்றும் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரது காலில் எலும்பு முறிவு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் ரூர்க்கி மருத்துவமனையில் இருந்து டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.  

இந்த விபத்து குறித்து டிஜிபி அசோக் குமார்,"இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் சென்ற கார் அதிகாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது. ரூர்க்கி அருகே முகமதுபூர் ஜாட் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பண்ட் கூறியபடி, அவர் ஓட்டும் போது தூங்கிவிட்டார். 

இதன் விளைவாக கார் சாலையில் இருந்த டிவைடரில் மோதி தீப்பிடித்தது. ரூர்க்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது டேராடூனுக்கு மாற்றப்பட்டுள்ளார்" என்றார். தாயுடன் புத்தாண்டை கொண்டாட டெல்லிக்கு சர்ப்ரைஸாக சென்றபோது, துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கியுள்ளார். 

ரிஷப் பண்ட்  தற்போது நடைபெற்று முடிந்த வங்கதேசத்திற்கு உடனான சுற்றுப்பயணத்தை முடித்து நாடு திரும்பியிருந்தார். ஜனவரி மாதம் இந்தியாவில் நடைபெறும் இலங்கை உடனான தொடரில் இவருக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. 

தொடர்ந்து, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, துபாயில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பார்ட்டியில் ரிஷப் பண்ட் பங்கேற்றிருந்தார். அதன் புகைப்படங்களை தோனியின் மனைவி சாக்ஷி இணையத்தில் பகிர்ந்திருந்தார். இந்திய அணியின் குறிப்பாக டெஸ்ட் அரங்கில் மிக முக்கிய வீரராக திகழும் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. 

மேலும் படிக்க | 2k கிட் என நிரூபித்த பிரித்வி ஷா! அணியில் வாய்ப்பு கிடைக்காததால் செய்த காரியம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News