ரவீந்திர ஜடேஜாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

Last Updated : Aug 18, 2019, 03:58 PM IST
ரவீந்திர ஜடேஜாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது! title=

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது!

இந்தியாவில் விளையாட்டு வீரர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜிவ் கேல் ரத்னா, துரோணாச்சாரியா, அர்ஜுனா போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான விருதுகளுக்கு விளையாட்டு வீரர்களை பரிந்துரைப்பதற்கான 12 பேர் அடங்கிய குழு நேற்று டெல்லியில் கூடியது. 

இந்திய அணியின் ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா உள்பட 19 விளையாட்டு வீரர்களின் பெயர் அர்ஜுனா விருதுக்கு இக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதன்படி பல்வேறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட வீரர்களின் விபரம்

ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது: பஜ்ரங் புனியா (மல்யுத்தம்), தீபா மாலிக் (மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளம்)அர்ஜுனா விருது: தேஜிந்தர் பால் சிங் டூர் (தடகளம்), முகமது அனஸ் யஹியா (தடகளம்), எஸ். பாஸ்கரன் (பாடி பில்டிங்), சோனியா லெதர் (குத்துச்சண்டை), ரவீந்திர ஜடேஜா (கிரிக்கெட்), சிங்லென்சனா சிங் கங்குஜாம் (ஹாக்கி), அஜய் தாக்கூர் (கபடி), கௌரவ் சிங் கில் (மோட்டார் ஸ்போர்ட்ஸ்), பிரமோத் பகத் (பேட்மிண்டன்), அஞ்சும் முட்கில் (துப்பாக்கிச் சுடுதல்), ஹர்மீத் ராஜுல் தேசாய் (டேபிள் டென்னிஸ்), பூஜா தண்டா (மல்யுத்தம்), ஃபௌவத் மிர்சா (குதிரைச்சவாரி), குர்பிரீத் சிங் சந்து (கால்பந்து), பூனம் யாதவ் ( கிரிக்கெட்), ஸ்வப்னா பர்மன் (தடகள), சுந்தர் சிங் குர்ஜார் (பாரா விளையாட்டு-தடகள), சாய் பிரனீத் (பேட்மிண்டன்), சிம்ரன் சிங் ஷெர்கில் (போலோ).

துரோணாச்சாரியா விருது: விமல் குமார் (பேட்மிண்டன்), சந்தீப் குப்தா (டேபிள் டென்னிஸ்), மொஹிந்தர் சிங் தில்லான் (தடகளம்).

தயான்சந்த் விருது: மேனுவல் ஃப்ரெட்ரிக் (ஹாக்கி), அருப் பாசக் (டேபிள் டென்னிஸ்), மனோஜ் குமார் (மல்யுத்தம்), நிட்டன் கிர்டானே (டென்னிஸ்), சி லால்ரெம்சங்கா (வில்வித்தை).

Trending News