நியூசிலாந்து - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரின் ஒருபகுதியாக இன்று இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடியது. நியூசிலாந்து அணி தரப்பில் துவக்க வீராங்கனைகளாக களமிறங்கிய சுயிஸ் பேட்ஸ் 0(4), சோபியா டிவெயின் 7(11) ரன்களில் வெளியேற இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சொற்ப ரன்களுடன் வெளியேறினர்.
That is it! Mithali Raj finishes it off with a SIX. India win by 8 wickets and lead the three-match series 2-0. #NZvIND
Details - https://t.co/HpmPFBz0T2 pic.twitter.com/neLHj6FJzz
— BCCI Women (@BCCIWomen) January 29, 2019
நியூசிலாந்து அணி தரப்பில் அணி தலைவி எமி ஸ்டெர்வொயிட் 71(87) ரன்கள் குவித்தார். இதர வீராங்கனைகள் 20 ரன்களை கூட எட்டாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி ஆட்டத்தின் 44.2-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே குவித்தது.
இந்திய அணி தரப்பில் ஜூலான் கோசுவாமி சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேப்போல் எக்தா பிஸ்ட், தீப்தி ஷர்மா, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். இதனையடுத்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய வீரங்கனைகள் ஆட்டத்தின் 35.2-வது பந்தில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டினர்.
இந்தியா தரப்பில் துவக்க வீராங்கனையாக களமிறங்கிய ஜாம்மியா ரோட்ஜுருகிஸ் 0(8) ரன்களில் வெளியேறிய போதிலும், ஸ்மிரித்தி மந்தனா சிறப்பாக விளையாடி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 90(83) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக மிதாலி ராஜ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 63(111) ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடி அணியின் வெற்றியை உறுதி செய்த ஸ்மிரித்தி மந்தனா ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இப்போட்டில் இந்தியா பெற்ற வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என்ற முன்னிலை பெற்று தொடரை வென்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 1-ஆம் நாள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.