இந்தியா மற்றம் மேற்கிந்திய அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற இரண்டாவத டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது!
இந்தியா மற்றும் மேற்கிந்தியா தீவுகள் அணி மோதும் இரண்டாவது டெஸ்ட் கடந்த அக்டோபர் 12-ஆம் நாள் துவங்கி ஐதராபாத் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறி வந்த நிலையில் ஆட்டத்தின் 101.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 311 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஷ் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 106(189) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். அதேப்போல் ஜாசன் ஹோல்டர் 52(92) ரன்கள் குவித்து வெளியேறினார். இதர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட், குல்தீப் யாதவ் 3 விக்கெட், அஷ்வின் 1 விக்கெட் குவித்தனர்.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் KL ராகுல் 4(25) ரன்களில் வெளியேற பிரித்வி ஷா 70(53) ரன்கள் குவித்தார். இவர்களை தொடர்ந்து வந்த கோலி 45(78), ரஹானே 80(183), ரிஷாப் பன்ட் 92(134) என ரன்களை குவித்து அணியின் எண்ணிக்கையினை கனிசமாக உயர்த்தினர். இறுதிவரை நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்த இந்தியா அணி 106.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 367 ரன்கள் குவித்தது.
2nd Test. It's all over! India won by 10 wickets https://t.co/U21NN9m6XC #IndvWI @Paytm
— BCCI (@BCCI) October 14, 2018
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய மேற்கிந்திய அணி ஆரம்பம் முதலே தடுமாறி வந்தது. ஆட்டத்தின் 46.1-வது பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய ப்ரத்வி ஷா 33(45) மற்றும் KL ராகுல் 33(53) ரன்களுடன் அதிரடி காட்டி 16.1-வது பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.