India vs South Africa: மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டிக்காக இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் கவுகாத்திக்கு சென்றுள்ளது. தொடரின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று 1-0 என முன்னிலை பெற்றது. 2வது டி20யில் மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன, அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று (அக்டோபர் 2) நடக்கிறது. போட்டி மாலை 7 மணிக்கு தொடங்கும். வெற்றியுடன் தொடரை தொடங்கிய இந்திய அணி 107 என்ற இலக்கை துரத்தி 1-0 என முன்னிலை பெற்றது.
#TeamIndia finish things off in style!
A SIX from vice-captain @klrahul to bring up his FIFTY as India take a 1-0 lead in the 3-match #INDvSA T20I series. @mastercardindia | @StarSportsIndia pic.twitter.com/6Fh0APf52F
— BCCI (@BCCI) September 28, 2022
மேலும் படிக்க | T20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா பும்ரா? மவுனம் காக்கும் பிசிசிஐ - பின்னணி இதுதான்
தீபக் சாஹர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் சிறப்பான பவுலிங்கினால், இந்தியா தென்னாப்பிரிக்காவை வெறும் 106 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவின் ஆரம்ப விக்கெட்டுகளை இழந்தாலும், 16.4 ஓவர்களில் இலக்கைத் எட்டி வெற்றி பெற்றது. சூர்யகுமார் யாதவ் 33 பந்தில் 50* ரன்களும், கேஎல் ராகுல் 56 பந்தில் 51 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 2வது டி20யில் வெற்றி பெற்றால், இந்தியா தொடரை கைப்பற்றும் அதே வேளையில், இந்தியாவில் இதுவரை எந்த டி20ஐ தொடரையும் இழக்காத தென்னாப்பிரிக்காவுக்கு இது கட்டாயம் வெல்ல வேண்டிய ஆட்டமாகும். முன்னதாக இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்தியா-தென்.ஆப்பிரிக்கா டி20 தொடர் 2-2 என டிராவில் முடிந்தது.
2வது டி20 போட்டியின் போது மழை அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். 2வது டி20 போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், கவுகாத்தியின் வானிலை முன்னறிவிப்பைப் பார்ப்போம். ஆட்டம் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) மாலை 5:00 மணிக்கு மழை பெய்ய 51 சதவீதம் வாய்ப்பு உள்ளது. இந்த சதவீதம் ஒரு மணிநேரம் கழித்து 47 ஆகவும், மாலை 7:00 மணிக்கு 34 ஆகவும் குறையும். இரவு 9:00 மணி வரை மழைக்கான வாய்ப்பு 40% க்கும் குறைவாக இருக்கும், ஆனால் இரவு 10:00 மணிக்கு 49 ஆக அதிகரிக்கும். இரவு 11:00 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆனால் அதற்குள் போட்டி முடிவடைய வேண்டும். கவுகாத்தியில் கடந்த முறை சர்வதேச போட்டி நடந்தபோது மழையால் ஆட்டம் கைவிடப்பட்டது.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ