ஷுப்மான் கில், சிராஜ் அவுட்... சூர்யகுமார், ஷமிக்கு வாய்ப்பு! பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் பிளேயிங் லெவன்

டெங்கு காய்ச்சலில் இருந்து குணமடைந்த ஷுப்மான் கில், பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பு குறைவு. அதேபோல், முகமது சிராஜூக்கு பதிலாக முகமது ஷமி, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக சூர்யகுமார் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 12, 2023, 05:47 PM IST
  • இந்தியா - பாகிஸ்தான் போட்டி
  • சிராஜ், சுப்மான் கில் அவுட்
  • சூர்யகுமார், முகமது ஷமிக்கு வாய்ப்பு
ஷுப்மான் கில், சிராஜ் அவுட்... சூர்யகுமார், ஷமிக்கு வாய்ப்பு! பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவின் பிளேயிங் லெவன் title=

இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை அசத்தலாகத் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மூன்றாவது ஆட்டத்தில் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அக்டோபர் 14 அன்று நடைபெறும் பிளாக்பஸ்டர் மோதலில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பு ஒருபடி பிரகாசமாகும்.

காயசலில் இருந்து குணமாகியிருக்கும் சுப்மான் கில் அகமதாபாத்தை அடைந்துவிட்டார். அவர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டாலும், விளையாட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. ஏனென்றால் மேட்சுக்கு ஏற்ப பிட்டாக இன்னும் சிறிது காலம் ஆகும். டெங்கு காய்ச்சலுக்காக தீவிர சிகிச்சை பெற்று, இப்போது தான் பயிற்சியை தொடங்கியிருக்கிறார். உடனே அவரை பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறக்குவதற்கு இந்திய அணி நிர்வாகம் தயாராக இல்லை. அதனால், ரோஹித் ஷர்மாவுடன் இஷான் கிஷன் தொடர்ந்து ஓப்பனிங் இறங்குவார்.

மேலும் படிக்க | கிரிக்கெட்டில் இருந்து அரசியலுக்கு வந்த டாப் 10 இந்திய கிரிக்கெட் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் போட்டியில் அஸ்வினை நீக்கிய இந்தியா, அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூரை சேர்த்தது. பேட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்ற அடிப்படையில் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. ஆனால், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வலுவான பேட்டிங் கொண்ட ஒருவரை பிளேயிங் லெவனில் சேர்க்க இந்திய அணி திட்டமிட்டிருக்கிறது. ஏனென்றால் அகமதாபாத் பிட்ச் பேட்டிங்கிற்கு உகந்ததாக இருக்கிறது. அங்கு நடைபெற்ற முதல் உலக கோப்பை லீக் போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 283 ரன்கள் இலக்கை நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து எட்டிபிடித்து அபார வெற்றி பெற்றது. இதனை கருத்தில் கொண்டு சூர்யகுமார் யாதவை அணியில் சேர்க்க இந்திய அணி விரும்புகிறது. 

அந்தவகையில் பார்க்கும்போது இந்திய அணியின் பிளேயிங் லெவன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எப்படி இருக்கும் என்பதை இங்கே பார்க்கலாம். இஷான் கிஷானுடன் ரோஹித் சர்மா ஓபன் செய்வார். விராட் கோலி 3 வது இடத்திலும், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் முறையே 4 மற்றும் 5வது இடங்களில் களமிறங்குவார்கள். சூர்யகுமார் யாதவ் சேர்க்கப்பட்டால் 6வது இடத்தில் களமிறங்குவார். ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் ஆல்ரவுண்டர்களாக இருப்பார்கள். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடும் XI-ல் இருப்பார்கள். வேகப்பந்துவீச்சு கூட்டணியில் சிராஜ் நீக்கப்பட்டு முகமது ஷமி சேர்க்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது. 

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாடும் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ் / ஷர்துல் தாக்கூர், ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி

மேலும் படிக்க | Worldcup 2023: இன்னும் எத்தனை போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு செல்லும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News