இந்தியா vs பாகிஸ்தான் ஆசிய கோப்பை 2022: ஆசியக் கோப்பை 2022 இல் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28) துபாயில் பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ‘மணிக்கட்டு காயம்’ காரணமாக ஆசிய கோப்பை போட்டியில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று சமூக ஊடகங்களில் செய்தி வெளியானபோது ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 27) தொடங்கும் ஆசிய கோப்பை 2022 போட்டியில் இலங்கை வர்ணனையாளர் ரோஷன் அபேசிங்கவிடமிருந்து இந்த செய்தி வந்ததால் சமூக ஊடகங்கள் பரபரப்பாக இருந்தன.
மேலும் படிக்க | IND vs PAK: பாகிஸ்தானில் பிறந்து இந்தியாவிற்காக விளையாடிய 3 வீரர்கள்!
ரோஷன் தனது ட்வீட்-ல், “விராட் கோலி மணிக்கட்டு காயம் காரணமாக ஆசிய கோப்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவருக்கு பதிலாக ஷுப்மன் கில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று பதிவிட்டு இருந்தார்.
அதிர்ஷ்டவசமாக, இந்த செய்தி உண்மையல்ல என்று நிரூபணமானதால், இந்திய ரசிகர்கள் இப்போது நிம்மதி பெருமூச்சு விடுகிறார்கள். அபேசிங்க உடனடியாக அந்த ட்வீட்டை நீக்கிவிட்டு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார், “விராட்டின் செய்தி போலியானது. ட்வீட் நீக்கப்பட்டது” என்று மீண்டும் பதிவிட்டார்.
Sorry Virat's news is fake. Tweet has been deleted.
— Roshan Abeysinghe (@RoshanCricket) August 25, 2022
உண்மையில், துபாயில் உள்ள ஐசிசி அகாடமியில் இந்திய அணி மற்றும் விராட் கோஹ்லி பயிற்சியில் பங்கேற்றார். ஜூலை மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது கடைசியாக விளையாடிய கோஹ்லி, ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு ஆசியக் கோப்பைக்கான இந்திய அணிக்குத் திரும்பினார். இங்கிலாந்தில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் 16 மற்றும் 17 ரன்கள் எடுத்தார். எட்ஜ்பாஸ்டனில் ஐந்தாவது டெஸ்டில் 11 மற்றும் 20 தவிர இரண்டு டி20 போட்டிகளில் 11 ரன்கள் அடித்தார். துபாயில் ஆகஸ்ட் 28 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான ஆசியக் கோப்பை 2022 தொடக்க போட்டி மிகவும் எதிர்பார்க்கபடுகிறது. இது விராட் கோலிக்கு 100வது டி20 போட்டி ஆகும்.
மேலும் படிக்க | Ind Vs Pak: இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் நடைபெற்ற 4 மோதல்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ