Ind vs Pak, Ind 151/7: எக்கச்சக்க எதிர்பார்ப்பு, கொஞ்சம் டென்ஷன்!!

இந்திய பேட்டிங்கின் 20 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்துள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 24, 2021, 09:31 PM IST
Ind vs Pak, Ind 151/7: எக்கச்சக்க எதிர்பார்ப்பு, கொஞ்சம் டென்ஷன்!! title=

Ind vs Pak: டி20 உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.

இந்திய பேட்டிங்கின் 20 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்துள்ளது. இன்னிங்ஸ் துவக்கத்தில் பாகிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்களை எடுத்து இந்திய அணியையும் ரசிகர்களையும் டென்ஷனில் ஆழ்த்தியது. பின்னர் விராட் கோலியும் ரிஷப் பந்தும் சற்று சுதாரித்து ஆடத் துவங்கினர். ரிஷப் பந்த் கேட்ச் கொடுத்து அவுட் ஆன நிலையில், அடுத்து வந்த ஜடேஜாவுடன் சேர்ந்து கோலி நிதானமாக ஆடினார். 

இறுதியாக இந்திய அணியின் பேட்டிங்கின் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்துள்ளது. 

 

கிரிக்கெட் ஒரு வினோத விளையாட்டு. அதுவும் இந்தியாவில் இது ஒரு விளையாட்டையும் தாண்டி மிகப்பெரிய முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. ஆடும் வீரர்களுக்கு ஒரு வித அழுத்தம் என்றால், ரசிகர்களுக்கு உள்ள டென்ஷனுன் வேற லெவலில் இருக்கும். 

கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை உச்சத்திற்கு எடுத்துச்செல்லும் போட்டி ஒன்று உண்டு என்றால், அது இந்தியா பாகிஸ்தான் போட்டிதான். இதை ஒரு கிரிக்கெட் போட்டி என்று மட்டும் கொள்ளாமல், ஒரு யுத்தமாகவே ரசிகர்கள் நினைப்பது வழக்கம்.

அந்த காலம் முதல் இன்று வரை இந்தியா பாகிஸ்தான் (Ind vs Pak) போட்டிகளின் போது, இரு நாட்டு கிரிக்கெட் ரசிகர்களின் உணர்ச்சிகளும் உச்சம் தொடும். இந்த நிலையில், இன்று நடந்துகொண்டிருக்கும் இந்தியா-பாகிஸ்தான் டி-20 உலகக் கோப்பை போட்டிக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தார்கள். சமூக ஊடகங்களில், மீம்களும் கணிப்புகளும் களைகட்டி வருகின்றன. 

இந்திய அணி (Team India) தனது இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக அணியின் மன உறுதியும் அபாரமாக உள்ளது. இன்று நடக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கண்டு வருகின்றனர். 

இதற்கு முன்னர் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் நடந்துள்ள 50 ஓவர் மற்றும் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டிகளில் பல தருணங்கள்  ரசிகர்களின் நினைவை விட்டு நீங்காத வண்ணம் இன்றும் உள்ளன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News