IND vs NZ : ஒருநாள் தொடரை இழக்கிறதா இந்தியா... கடைசி போட்டிக்கு வாய்ப்பில்லை?

இந்தியா  - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடைபெறும் கிறிஸ்ட்சர்ச்சில் மழை பெய்ய அதிக வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 29, 2022, 05:26 PM IST
  • நியூசிலாந்து 1 - 0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரில் முன்னணியில் உள்ளது.
  • நியூசிலாந்து 2019 உலகக்கோப்பைக்கு பின் சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியில் தோற்கவே இல்லை.
IND vs NZ : ஒருநாள் தொடரை இழக்கிறதா இந்தியா... கடைசி போட்டிக்கு வாய்ப்பில்லை? title=

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை முடிந்த கையுடன் இந்திய அணி, நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதலில் நடைபெற்ற டி20 தொடரில், முதல் போட்டி மழை காரணமாக முழுமையாக ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாவது போட்டியை இந்தியா வென்றது. 

தொடர்ந்து, நடைபெற்ற கடைசி மற்றும் 3ஆவது போட்டி நடைபெற்றது. இதிலும், மழை குறுக்கிட்டதால் டக்-வெர்த் லீவிஸ் முறையில் போட்டி டிரா என அறிவிக்கப்பட்டது. இதனால், 1-0 என்ற கணக்கில் ஹர்திக் தலைமமையிலான இந்திய அணி தொடரை வென்றது. 

இதையடுத்து, தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒருநாள் தொடரையும் இந்தியா விளையாடியது. இதில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வளிக்கப்பட உள்ள நிலையில், ஷிகர் தவான் இந்திய ஒருநாள் அணியை வழிநடத்தினார். முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம் நடைபெற இருந்த இரண்டாவது ஒருநாள் போட்டியும் மழையால் ரத்து செய்யப்பட்டது. எனவே, தற்போது நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

மேலும் படிக்க | உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடினால் என்ன? முடிவுக்கு வரும் முக்கிய வீரரின் பயணம்!

அந்த வகையில், கிறிஸ்ட்சர்ச் நகரில் நாளை நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல் போட்டியில் பந்துவீச்சு சுமாராக இருந்ததால், கேப்டன் ஷிகர் தீபக் ஹூடாவை ஆறாவது பௌலராக அணியில் கொண்டுவந்தார். இதனால், சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போனது. தொடர்ந்து, ரிஷப் பண்ட் நீண்ட நாள்களாக சோபிக்காததால், நாளைய போட்டியில் யாருக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற கேள்வி அதிகரித்துள்ளது. 

ஆனால், அதையெல்லாம் விட மழைதான் இந்திய அணியை கவலைக்கொள்ள வைத்துள்ளது. போட்ட திட்டமிடப்பட்டுள்ள நேரத்தில், சுமார் 88 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், மழை குறுக்கிட்டு, பின் நேரம் இருந்தால் தலா 20 ஓவர்களாவது வீசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த 2019 உலகக்கோப்பைக்கு பின், நியூசிலாந்து தனது சொந்த மண்ணில் ஒரு ஒருநாள் போட்டியில் கூட தோற்றதில்லை என்ற பெருமையுடன் உள்ளது. அதை ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நாளை முறியடிக்குமா என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க | சானியா மிர்சா விவாகரத்தை அறிவிக்காதது ஏன் தெரியுமா...?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News