5வது முறை கோப்பையை வெல்லுமா U19 இந்தியா? இன்று பைனல்!

U19 இந்தியா மற்றும் U19 இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை பைனல் போட்டி இன்று நடைபெறுகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 5, 2022, 11:20 AM IST
  • 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை இந்தியா 4 முறை வென்றுள்ளது.
  • யாஷ் துல் தலைமையில் இந்திய பைனல் போட்டியில் விளையாடுகிறது.
  • இந்த தொடரில் இதுவரை இந்தியா, இங்கிலாந்து ஆகிய இரு அணிகளும் தோற்கடிக்கப்படவில்லை.
5வது முறை கோப்பையை வெல்லுமா U19 இந்தியா? இன்று பைனல்! title=

இன்று ஆன்டிகுவாவில் (Antigua) உள்ள நார்த் சவுண்டில் (North Sound) உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் (Sir Vivian Richards Stadium) 2022 உலகக்கோப்பை பைனல் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாட உள்ளது.  ஐசிசி யு19 உலகக் கோப்பை (Worldcup) பட்டத்தை 5வது முறை வெல்ல இந்தியா தயாராக உள்ளது.  இதுவரை நடைபெற்ற 14 தொடரில், இந்தியா 8 முறை இறுதிப் போட்டிகளில் விளையாடி 4 முறை கோப்பையை வென்றுள்ளது. மறுபுறம், இங்கிலாந்து அணி 1998க்கு பிறகு இதுவரை கோப்பை வெல்லவில்லை. 

u19

ALSO READ | U19 WC அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்திய அணி

இந்திய U19 வீரர்களுடன், முன்னாள் இந்திய கேப்டனும், 2008 ஆம் ஆண்டு U19 உலகக் கோப்பையை வென்றவருமான விராட் கோலி (Virat Kohli)கடந்த வியாழன் அன்று உரையாடி, மதிப்புமிக்க குறிப்புகளை அளித்தார். 2000ஆம் ஆண்டு முகமது கைஃப் தலைமையில் இந்தியா கோப்பையை வென்றது. 2008ல் கோஹ்லி தலைமையில் 2வது பட்டத்தை வென்றனர், 2012ல் உன்முக்த் சந்த் தலைமையில் அணி வெற்றி பெற்றது. கடைசியாக 2018ல் பிரித்வி ஷா தலைமையில் பட்டத்தை வென்றது. 2020ல் இந்தியா இறுதிப்போட்டிக்கு வந்து வங்கதேசத்திடம் தோற்றது.

U19

கேப்டன் யாஷ் துல் மற்றும் துணை கேப்டன் ஷேக் ரஷீத் ஆகியோர் கொரோனா தொற்று காரணமாக 3 லீக் ஆட்டங்களில் 2ஐ தவறவிட்டனர்.  இருப்பினும் இந்திய அணி பைனல் போட்டி வரை சென்றுள்ளது.  அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய வலுவான அணியாக உள்ளது.   ஆரம்ப விக்கெட்டுகளை இழந்த பிறகும், யாஷ் மற்றும் ரஷீத் 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் வெற்றிக்கு பிறகு, கடந்த 24 ஆண்டுகாலமாக கோப்பையை வெல்லாமல் இருப்பதை முடிவுக்கு கொண்டு வர இங்கிலாந்து ஆர்வமாக உள்ளது.  இந்தியாவைப் போலவே இங்கிலாந்தும் இந்தப் தொடர் முழுவதும் தோற்கடிக்கப்படவில்லை. 

ALSO READ | கோலி தலைமையில் உலகக்கோப்பை வென்ற இந்தியா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News