INDvsENG 5th test: இரண்டாம் நாள் முடிவில் 174/6 என தடுமாறிய இந்தியா....

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்கள், இந்திய அணி துவக்க வீரர்கள் வழக்கம் போல ஏமாற்றம். இரண்டாம் நாள் முடிவில் 174/6 என தடுமாறும் இந்திய அணி...

Last Updated : Sep 9, 2018, 09:11 AM IST
INDvsENG 5th test: இரண்டாம் நாள் முடிவில் 174/6 என தடுமாறிய இந்தியா.... title=

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன்கள், இந்திய அணி துவக்க வீரர்கள் வழக்கம் போல ஏமாற்றம். இரண்டாம் நாள் முடிவில் 174/6 என தடுமாறும் இந்திய அணி...

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று துவங்கி நடைப்பெற்று வருகிறது. இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடக்கத்திலே இங்கிலாந்து அணி 214 ரன்கள் எடுத்த போது ரஷித் 15 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனால், இங்கிலாந்து அணி 250 ரன்னுக்குள் ஆட்டமிழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்லர்-பிராட் ஜோடி ஆட்டத்தை மாற்றியது.

312 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் பிராட் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லர் – பிராட் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. பிராடை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பட்லர் 89 ரன்னில் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 122 ஓவரில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.

இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 3 ரன் எடுத்த நிலையில் ஷிகர் தவான் பிராட் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். தொடர்ந்து ராகுலும் அவருடன் இணைந்த புஜாராவும் அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர்.

ஸ்கோர் 70 ரன்களை எட்டிய போது ராகுல் 37 ரன்னில் சாம் கர்ரனின் பந்து வீச்சில் போல்டு ஆனார். 3-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராத் கோலி வந்தார். கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடிய புஜாரா 37 ரன்களில் ஆண்டர்சனின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ரஹானே ரன் ஏதும் எடுக்காமல் ஆண்டர்சனிடம் வீழ்ந்தார்.

பின்னர் கேப்டன் கோலியும், ஹனுமா விஹாரியும் அணியை சற்று தூக்கி நிறுத்த போராடினார். ரன்சேர்ப்பில் சற்று வேகம் காட்டிய நேரத்தில் இந்த ஜோடியை பென் ஸ்டோக்ஸ் பிரித்தார். அவரது பந்து வீச்சில் கோலி 49 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட்டும் நிலைத்து நிற்காமல் 5 ரன்னில் வெளியேற, தடுமாறி வருகிறது இந்திய அணி.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. அறிமுக வீரர் விஹாரி சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் 25 ரன்னுடனும் ஜடேஜா 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

 

Trending News