WTC Final Day 1: இந்தியா vs ஆஸ்திரேலியா.. ஓவல் ஆடுகளம் யாருக்கு சாதகம்? வானிலை எப்படி? மழை வருமா?

IND VS AUS, WTC Final, Day 1: இன்று முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோதவுள்ளன. போட்டி நடைபெறும் ஆடுகளம் யாருக்கு சாதகம்? அங்கு வானிலை எப்படி இருக்கும் என அனைத்து தகவல்களையும் அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 7, 2023, 12:34 PM IST
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டியில் டாஸ் பிற்பகல் 2.30 மணிக்கு போடப்படும்.
  • இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இதுவரை மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.
  • ரவீந்திர ஜடேஜா 11 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி 594 ரன்கள் குவித்துள்ளார்.
WTC Final Day 1: இந்தியா vs ஆஸ்திரேலியா.. ஓவல் ஆடுகளம் யாருக்கு சாதகம்? வானிலை எப்படி? மழை வருமா? title=

ICC World Test Championship Final 2023: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இன்று பிற்பகல் 3:00 மணிக்கு தொடங்குகிறது. இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியின் டாஸ் பிற்பகல் 2.30 மணிக்கு போடப்படும். இரு அணிகளும் முதன்முறையாக இங்கிலாந்தில் மோதுகின்றன.

ஆஸ்திரேலியா இதுவரை இங்கிலாந்தில் 176 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 31% போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. அதே நேரத்தில், இந்திய அணி இங்கு 68 போட்டிகளில் விளையாடி 9ல் மட்டுமே வெற்றி பெற்றது. ஓவல் ஆடுகளத்தைப் பற்றி பார்த்தால், ஓவலில் 38 டெஸ்டில் விளையாடி 7ல் மட்டுமே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அதபோல இந்தியா இங்கு 14 போட்டிகளில் விளையாடி 2ல் மட்டுமே வெற்றி பெற்றது.

ஓவல் மைதானத்தில் இந்தியாவின் மறக்கமுடியாத தருணம். 1971 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடிய இங்கிலாந்தை இந்தியா தோற்கடித்தது. கேப்டன் அஜித் வடேகர் மற்றும் லெக் ஸ்பின்னர் சந்திரசேகர் 38 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா சுதந்திரம் அடைந்து 24 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது அதுவே முதல் முறையாக இருந்தது.

மேலும் படிக்க - IND vs AUS: WTC 2023 இறுதி போட்டியை இலவசமாக பார்ப்பது எப்படி?

இந்தியா Vs ஆஸ்திரேலியா அதிக வெற்றி யாருக்கு?
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே இதுவரை மொத்தம் 106 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. ஆஸ்திரேலியா 44 ஆட்டங்களிலும், இந்தியா 32 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இதில் 29 டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிந்தது மற்றும் ஒரு போட்டி டை (சமநிலை) ஆனது.

சச்சின் டெண்டுல்கரின் பெயர் முதலிடத்தில்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோஹ்லி, ஷமி, ஜடேஜா, அஷ்வின் மீது ரசிகர்க்களின் கவனம் அதிகமாக இருக்கும். அதேநேரத்தில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இளம் வீரர்கள் மீதும் ஆண் அனைவரின் பார்வை இருக்கும். இங்கிலாந்து மைதானத்தில் விராட் கோஹ்லி 1033 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து ஆடுகளங்களில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் முதலிடத்தில் உள்ளது. டெண்டுல்கர் அங்கு 1575 ரன்கள் எடுத்துள்ளார்.

விராட் கோஹ்லி மீது அதிக நம்பிக்கை:
இங்கிலாந்தில் கோஹ்லியின் ஆட்டத்தை பற்றி பார்த்தால், அவர் இங்கிலாந்தின் ஆடுகளங்களில் ஒவ்வொரு மூன்றாவது போட்டியிலும் அரைசதம் அடித்துள்ளார். கோஹ்லி இங்கிலாந்தில் 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவற்றில் 33.32 என்ற சராசரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார்.

மேலும் படிக்க - WTC Final 2023: சச்சின், டான் பிராட்மேனின் சாதனைகளை தகர்க்கப்போகும் விராட் கோலி..!

வெற்றிகரமான பந்துவீச்சாளராக முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா:
பந்து வீச்சாளர்களைப் பொறுத்தவரை, இஷாந்த் சர்மா மற்றும் கபில் தேவ் ஆகியோருக்குப் பிறகு, இங்கிலாந்து ஆடுகளங்களில் இந்தியாவின் வெற்றிகரமான பந்துவீச்சாளர் முகமது ஷமி உள்ளார். அங்கு ஷமி 13 போட்டிகளில் 38 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே சமயம் ரவீந்திர ஜடேஜா 11 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமின்றி 594 ரன்கள் குவித்துள்ளார்.

ஒவ்வொரு மூன்றாவது போட்டியிலும் சதம் அடிக்கும் ஸ்மித்
இங்கிலாந்து ஆடுகளங்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்தின் ஆட்டம் அற்புதமாக உள்ளது. அவர் 16 போட்டிகளில் 59.55 சராசரியில் 1727 ரன்கள் எடுத்துள்ளார். ஸ்மித் இங்கிலாந்து ஆடுகளங்களில் ஒவ்வொரு மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து வருகிறார். மேலும் டேவிட் வார்னர் 13 போட்டிகளில் 651 ரன்கள் எடுத்துள்ளார். பந்துவீச்சில் நாதன் லயன் 13 போட்டிகளில் 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

மேலும் படிக்க - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கவுண்ட்டவுன் ! ரோஹித் ஷர்மாவுக்கு குவியும் பாராட்டு

ஓவல் ஆடுகளம் எப்படி?
ஓவல் ஆடுகளத்தில் கடைசி டெஸ்ட் 2022 செப்டம்பரில் இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 இன்னிங்ஸ்களில் 31 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைத்து விக்கெட்டுகளையும் வேகப்பந்து வீச்சாளர்கள் கைப்பற்றினர். இரு அணிகளிலும் தலா ஒரு சுழற்பந்து வீச்சாளர் இருந்தார். ஓவலில் பவுன்ஸ் நன்றாக இருக்கிறது. எனவே இது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவுகிறது. ஆனால் போட்டி தொடர்ந்து நடைபெறும் போது, ஆடுத்தடுத்த நாள் ​​ஆடுகளமும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக மாற வாய்ப்பு உள்ளது.

வானிலை நிலவரம் எப்படி?
டெஸ்ட் போட்டியின் முதல் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யலாம், இதற்காக டெஸ்டில் ரிசர்வ் டே வைக்கப்பட்டுள்ளது. லண்டனில் முதல் நாள் வானிலை பெரும்பாலும் தெளிவாக இருக்கும். வெப்பநிலை 22 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

மேலும் படிக்க - WTC Final: ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர் காயம்! குஷியில் இந்திய அணி!

இரு அணிகளும் விளையாடும் சாத்தியமான 11 வீரர்கள் (கணிப்பு)

இந்தியா (11 பேர்): ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஷர்துல் தாக்கூர், கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்.

கூடுதல் வீரர்கள்: இஷான் கிஷன் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல் மற்றும் ஜெய்தேவ் உனத்கட்.

ஆஸ்திரேலியா (11 பேர்): பாட் கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), நாதன் லியான், மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட்

கூடுதல் வீரர்கள்: மார்கஸ் ஹாரிஸ், மைக்கேல் நெசர், ஜோஷ் இங்கிலிஸ் மற்றும் டாட் மர்பி.

மேலும் படிக்க - டெஸ்ட் போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா விரைவில் ஓய்வு..! WTC இறுதிப் போட்டிக்குப் பிறகு அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News