வார்ம்-அப் போட்டி: ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா

IND vs AUS Warm Up Match: இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, இப்போது அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தனது டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தை தொடங்கும். 

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 20, 2021, 08:59 PM IST
  • அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி.
  • எங்களிடம் சிறந்த ஐந்து பந்து வீச்சாளர்கள் உள்ளனர்: ரோஹித் சர்மா
  • இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் இந்தியா வெற்றி.
வார்ம்-அப் போட்டி: ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா title=

IND vs AUS Warm Up Match: இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டாஸ் வென்று முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 152/5 ரன்கள் எடுத்தது. ஸ்டீவ் ஸ்மித் அந்த அணிக்காக 57 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், ஆர்.அஷ்வின் இந்தியாவுக்காக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்திய அணி 17.5 ஓவர்களில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்டியது. ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 14 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 27 பந்துகளில் 38 ரன்களும் எடுத்தனர். முன்னதாக, இந்தியா தனது முதல் பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

வெற்றி இலக்கை அடைய களத்தில் இறங்கிய கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தனர். ஆஷ்டன் அகர் ராகுலை 39 ரன்களில் அவுட் செய்து வெளியேற்றி இந்த கூட்டணிக்கு பிரேக் போட்டார்.

மீண்டும் பார்மில் ஹிட்மேன்:
பயிற்சி ஆட்டத்தில், ரோஹித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 41 பந்துகளில் 60 ரன்கள் எடுத்தார். அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்தார். ரோகித் ஓய்வுக்கு பிறகு பெவிலியன் திரும்பினார். உலகக் கோப்பை போட்டியில் ஆடுவதற்கு முன்பு ஹிட்மேனுக்கு இந்த இன்னிங்ஸ் மிகவும் முக்கியமானது. முன்னதாக, அவர் ஐபிஎல் ஃபேஸ் -2 இல் ரன்கள் அடிக்க போராடினார் மற்றும் 6 இன்னிங்ஸில் அவரது பேட்டில் இருந்து 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

ALSO READ |  டி 20 உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய அணியின் கேப்டன் யார்? கசிந்த தகவல்

அஷ்வின் தொடர்ச்சியாக 2 விக்கெட்டை வீழ்த்தினார்:
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மோசமான தொடக்கத்தை பெற்றது. இரண்டாவது ஓவரின் ஐந்தாவது மற்றும் ஆறாவது பந்துகளில், டேவிட் வார்னர் (1) மற்றும் மிட்செல் மார்ஷ் (0) ஆகியோரை வெளியேற்றி இந்தியாவுக்கு இரண்டு விக்கெட்டை அஷ்வின் வழங்கினார். இதன் பிறகு, ஆரோன் பின்ச் 8 ரன்னில் அவுட் செய்து ரவீந்திர ஜடேஜா கங்காரு அணியின் முதுகெலும்பை உடைத்தார். ஒரு கட்டத்தில் கங்காரு அணியின் ஸ்கோர் 11/3 என இருந்தது. நான்காவது விக்கெட்டுக்கு ஸ்மித் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் 53 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தனர். இந்த கூட்டணியை ராகுல் சாஹரால் மேக்ஸ்வெல்லை 37 ரன்னில் வெளியேற்றி முறியடித்தார். அதே நேரத்தில், கடைசி ஓவரில், புவனேஸ்வர் குமார் ஸ்டீவ் ஸ்மித் 57 ரன்னில் அவுட்டாகி இந்தியாவுக்கு 5 வது விக்கெட்டை பெற்று தந்தார்.

விராட் கோழியும் பந்து வீசினார்:
இந்த போட்டியில் விராட் கோலியும் பந்துவீசுவதை காண முடிந்தது. கோலி இரண்டு ஓவர்கள் வீசி 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அவர் விக்கெட் எதுவும் எடுக்கவில்லை. இந்திய அணியின் டி-20 வடிவத்தில் 12 இன்னிங்ஸில் பந்துவீசிய விராட் கோலி 4 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

ஆறாவது பந்துவீச்சாளர் தேவை:
இன்றைய போட்டியில் விராட் கோலிக்கு பதிலாக ரோஹித் சர்மா அணிக்கு கேப்டனாக இருந்தார். டாஸ் போட்ட பிறகு ரோஹித் கூறுகையில், இந்தப் போட்டியில் ஆறாவது பந்துவீச்சு விருப்பத்தை நாங்கள் கண்டுபிடிப்போம். அதேபோல நாங்கள் பேட்டிங் வரிசையின் விருப்பங்களையும் ஆராய்வோம். அனைத்து சோதனைகளும் இன்று செய்யப்படும். ஹர்திக் பாண்டியா இன்னும் பந்துவீசவில்லை. ஆனால் அவர் தொடருக்கு தயாராக இருக்க வேண்டும். எங்களிடம் சிறந்த ஐந்து பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் ஆறாவது பந்து வீச்சாளர் தேவை என்றார்.

ALSO READ |  இந்திய அணியின் டி 20 கேப்டனாக கேஎல் ராகுலை நியமிக்க வேண்டும் என கோரிக்கை

தோனியின் மேற்பார்வையில் பந்த்:
மைதானத்திற்கு வெளியே, இந்திய அணியின் வழிகாட்டி எம்எஸ் தோனி, ரிஷப் பந்துடன் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதை காண முடிந்தது. எனினும், இன்றைய போட்டியில் ரிஷப் பந்துக்கு பதிலாக இஷான் கிஷன் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். 

இனி அக்டோபர் 24 க்கு காத்திருப்போம்:
இரண்டு வார்ம்-அப் போட்டிகளிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, இப்போது அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி (India played against Pakistan) தனது டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தை தொடங்கும். இந்த போட்டிக்காக உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ALSO READ |  நான் தோனியை சிறந்த பேட்ஸ்மேனாக பார்த்ததில்லை - ஹர்திக் பாண்டியா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News