11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின.
முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.
ஆஸ்திரேலிய அணி 7 லீக் ஆட்டங்களில் ஆடி ஒன்றில் மட்டுமே தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி 7 ஆட்டங்களில் 5-ல் வெற்றியும், 2 ஆட்டங்களில் தோல்வியும் கண்டது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா இதுவரை 42 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஆஸ்திரேலிய அணி 34 முறையும், இந்திய அணி 8 தடவையும் வெற்றி பெற்றுள்ளன.
உலக கோப்பை போட்டியில் இரு அணிகளும் 11 முறை மோதியுள்ளனர். இதில் ஆஸ்திரேலியா அணி 9 முறையும், இந்திய அணி 2 தடவையும் வெற்றி பெற்றுள்ளது.
இன்றைய போட்டிக்கான இரு அணி வீராங்கனைகள் விவரம் வருமாறு:-
இந்தியா: மிதாலி ராஜ் (கேப்டன்), எக்தா பிஷ்ட், ராஜேஸ்வரி கெய்க்வாட், கோஸ்வாமி, மான்சி ஜோஷி, ஹர்மன்பிரீத் கவுர், வேதா கிருஷ்ணமூர்த்தி, மந்தனா, மோனா மேஷ்ரம், ஷிகா பாண்டே, பூனம் யாதவ், நுஷாத் பர்வீன், பூனம் ரவுத், தீப்தி ஷர்மா, சுஷ்மா வர்மா.
ஆஸ்திரேலியா: மெக் லேனிங் (கேப்டன்), சாரா அலெய், கிறிஸ்டன் பீம்ஸ், அலெக்ஸ் பிளாக்வெல், நிகோல் பால்டன், ஆஷ்லிக் கார்ட்னெர், ராச்சல் ஹெய்ன்ஸ், அலிசா ஹீலே, ஜெஸ் ஜோனசென், பெத் மூனி, எலிஸ் பெர்ரி, மெகன் ஸ்கப்ட், பெலின்டா வகரெவா, வில்லானி, அமந்தா ஜாட் வெலிங்டன்.
பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் தொடங்க உள்ளது.