2020 ஆண்டில் இருந்து பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் உரிமை சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் இந்தியா பெற்றுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. அடுத்த ஆண்டின் உலகக்கோப்பை தொடரை நடத்துவதற்கு பல்வேறு நாடுகள் விண்ணப்பித்திருந்தன.
இது தொடர்பாக நேற்று மியாமியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், அடுத்த ஆண்டு 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உலகக் கோப்பை தொடரை நடத்தும் உரிமையை இந்தியாவிற்கு வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும் இந்திய கால்பந்து சங்கம், 2020ல் 17 வயதுக்குப்பட்ட பெண்களுக்கான உலகக்கோப்பையை நடத்த உள்ளது என சர்வதேச கால்பந்து சம்மேளனம் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டது.