இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது இருபது ஓவர் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கிரன் பொல்லார்டு பவுலிங் தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் நிதானமாக விளையாடினர். ரோகித் 19 ரன்களில் அவுட்டான நிலையில், இஷான் கிஷன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
மேலும் படிக்க | எனது மகன் விளையாடுவதை நான் பார்க்க மாட்டேன்: சச்சின்
அடுத்து வந்த விராட் போலி 41 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவுட்டாப் ஃபார்மில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தற்கு, அரைசதம் மூலம் பதிலடி கொடுத்தார். மிடில் ஆர்டரில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பன்ட் களமிறங்கிய பிறகு, இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
ரிஷப் பன்ட் 28 பந்துகளில் 52 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். வெங்கடேஷ் ஐயர் 18 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. 187 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயிகப்பட்டது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதால், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் வெஸ்ட் அணி, 2வது இன்னிங்ஸில் களமிறங்கியது.
மேலும் படிக்க | இலங்கை தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR